Search This Blog

Friday, March 28, 2014

Thaengai Sadham - Coconut Rice

தேங்காய் சாதம் : கலந்த சாத வகைகளில் இதுவும் ஒன்றாகும். எலுமிச்சை சாதம் மற்றும் புளி சாதம் போல கார சாரமாக இருக்காது. ஆனால் தேங்காயின் மணத்துடனும் சுவையுடனும் அருமையாக இருக்கும். தேங்காய் சேர்த்து செய்வதால் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. நீண்ட பயணங்களுக்கு அல்லது மதிய சாப்பாட்டிற்கு எடுத்து செல்லும் போது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் சாப்பிட்டு விடுவது அவசியம்.
இப்போது எப்படி செய்வது என பார்ப்போம். இந்த அளவு ஒருவர் மதிய சாப்பாட்டிற்கு எடுத்து செல்ல சரியாக இருக்கும்.


தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        பச்சரிசி
1/2 கப்                                        தேங்காய் துருவல் [ அட்ஜஸ்ட் ]
3/4 Tsp                                         உப்பு
1/2 Tsp                                          வெள்ளை மிளகு தூள் [ தேவைபட்டால் ]


தாளிக்க :
1/2 Tsp                                         கடுகு
2 Tsp                                            கடலை பருப்பு
3 Tsp                                             நிலகடலை
4                                                   முந்திரி [ இருந்தால் ]
20                                                  கருவேப்பிலை
2 அ 3                                            சிகப்பு மிளகாய்
2 Tsp                                             தேங்காய் எண்ணெய்
2 Tsp                                             எண்ணெய்

செய்முறை :
அரிசியை கழுவி குக்கரில் எடுத்து 1 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும்வரை அதிக தீயில் வேகவைக்கவும்.
பின்னர் 3 நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கவும்.


ஆவி நன்கு அடங்கிய பின்னர் ஒரு அகண்ட பாத்திரத்தில் போட்டு காற்றாடியின் கீழே ஆற விடவும்.
இன்னொரு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை முதலில் வெடிக்க விடவும்.
பின்னர் மிளகாய் மற்றும் எல்லா பருப்பையும் சிவக்க வறுக்கவும்.


கடைசியாக கருவேப்பிலையை வறுத்தெடுத்து ஆரிய சாதத்தின் மேல் கொட்டவும்.


அதே எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஏதும் சேர்க்காமல் தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும்.


வறுத்த தேங்காயையும் சாதத்துடன் சேர்க்கவும்.

இப்போது 2 Tsp தேங்காய் எண்ணெயை சாதத்தின் மேல் ஊற்றி உப்பு சேர்த்து சாதத்தை கரண்டியால் நன்கு கிளறவும்.
தேவையானால் மிளகு பொடி சேர்த்து உப்பு சரிபார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.


சுவையான தேங்காய் சாதம் தயார்.
அப்பளம், கூட்டு , ஒரு நல்ல கார கறியுடன் சுவைக்கவும்.

குறிப்பு :
கிள்ளி  போடும் மிளகாய் மட்டுமே காரம் ஆகும். போதவில்லை என்றால் மிளகு தூளை சேர்க்கவும். சிகப்பு மிளகாய் தூளை சேர்த்தால் சாதத்தின் நிறம் மாறி விடும்.
தேங்காய் எண்ணெய் இல்லை என்றால் எப்போதும் உபயோகப்படுத்தும் எண்ணெயை உபயோகிக்கலாம்.











No comments:

Post a Comment