Search This Blog

Saturday, November 30, 2013

Banana Sweet Adai

#வாழைப்பழம்இனிப்புதோசை : #வாழைப்பழம் நன்கு கனிந்து விட்டால் சாப்பிட சிலருக்கு பிடிப்பதில்லை. எனக்கும் பிடிக்காது. அப்போதெல்லாம் இந்த அடையை செய்வது வழக்கம். வாழைப்பழத்தின் மணமும் சுவையும் வெல்லத்துடன் சேர்ந்து மிக நன்றாக இருக்கும். செய்வதும் மிக எளிது. எப்படி செய்வது என்று இப்போது காணலாம். கொடுக்கப்பட்டுள்ள அளவு 4 அ 5 அடைகள் செய்ய போதுமானது.



தேவையான பொருட்கள் :
வாழைப்பழம்                         : 1
கோதுமை மாவு                     : 1/2 கப்
அரிசி மாவு                               : 1 Tbsp
ரவா                                             : 1/4 கப்
வெல்லம்                                  : 1/3 கப் ( அட்ஜஸ்ட் )
ஏலக்காய் தூள்                       : 1/4 Tsp
உப்பு                                            : 1 சிட்டிகை
எண்ணெய் / நெய்                  : தேவையான அளவு

மாவு செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வாழைப் பழத்தை துண்டுகளாக்கி போடவும்.


கையாலோ அல்லது மத்தாலோ நன்கு மசித்து விடவும்.


அடுப்பில் மற்றொரு பாத்திரத்தில்  வெல்லத்தை நசுக்கி போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி சூடு பண்ணவும்.


கரண்டியினால் கலக்கி வெல்லத்தை கரைக்கவும்.
வெல்லம் கரைந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
ஆறியவுடன் வடிகட்டி வாழைப்பழத்துடன் சேர்க்கவும்.
மற்ற மாவையும் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்.


அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.

அடை ஊற்றும் முறை :
அடுப்பில் இரும்புக்கல்லோ ( அ ) ஒட்டாமல் வரும் கல்லோ வைத்து சூடாக்கவும்.
சூடான பின் கல்லில் எண்ணெய் தடவி மாவை பரப்பவும்.


அதன் மேலேயும் ஓரத்திலும் சொட்டு சொட்டாக எண்ணெய் விடவும்.
அடையின் ஓரம் இலேசாக சிவந்த பின் திருப்பி போட்டு வேக விடவும்.
பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.


இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
ம்ம்... ஆஹா! என்ன ருசி!!






முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் 

வாழைப்பூ பருப்பு உருண்டை
வாழைப்பூபசலைஅடை
பெசரட்டு
பெசரட்டு
அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை



No comments:

Post a Comment