Search This Blog

Sunday, May 8, 2016

KadalaiParuppu-Chutney

#கடலைபருப்புசட்னி : #சட்னி என்றவுடன்  நினைவுக்கு வருவது தேங்காய் சட்னிதான். தேங்காய் சட்னி செய்ய பொட்டுக்கடலை மிக மிக அவசியம். எப்போதும் ஒரே மாதிரி சட்னி அரைத்து சாப்பிட்டால் அலுப்பு தட்டி விடும்.
அதனால் பொட்டுக்கடலைக்குப் பதிலாக கடலை பருப்பு கொண்டு சட்னி செய்து பார்த்தேன். வறுத்த கடலை பருப்பின் மணமும் மிளகாயின் காரமும் சேர்ந்து சட்னி மிக மிக அருமையாக இருந்தது.
இனி எவ்வாறு செய்வது என காணலாம்.

கடலைபருப்பு சட்னி

தேவையான பொருட்கள் :
3 - 4 Tspகடலை பருப்பு
2 - 3சிகப்பு மிளகாய்
2 - 3பூண்டு பற்கள்
1/2 கப்தேங்காய் துருவல்
1 - 1 1/2 Tspஎலுமிச்சை சாறு [ adjust ]
3/4 Tspஉப்பு [ adjust ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
8 - 10கறுவேப்பிலை
2 Tspநல்லெண்ணெய்

செய்முறை :
அடுப்பை பற்ற வைத்து வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
முதலில் சிகப்பு மிளகாயை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
வறுத்ததை தனியே ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அதே வாணலியில் கடலை பருப்பை நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பருப்பை மிளகாய் வைத்திருக்கும் தட்டில் எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பிறகு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும்.
அரைத்த சட்னியின் சுவையை சரி பார்க்கவும்.
தேவையெனில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் மிக்ஸியை ஒரு சுற்று சுற்றி அரைக்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் வாணலியை அடுப்பில் 1 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு போட்டு வெடித்தவுடன் கருவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைத்துவிடவும்.
தாளித்ததை சட்னியின் மீது கொட்டவும்.
சுவையும் காரமும் நிறைந்த சட்னி தயார்.
அனைத்து டிபன் வகைகளுக்கும் பொருத்தமான சட்னி ஆகும்.
கடலைபருப்பு சட்னி




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.

பன்னீர் மசாலா கறி வாழைப்பூ குழம்பு வல்லாரை சட்னி
நெல்லிக்காய் புதினா துவையல் இஞ்சி துவையல்

மற்ற சட்னி வகைகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

தொட்டுக்க


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment