Search This Blog

Thursday, March 10, 2016

Sigappu-keerai-masiyal 1

#சிகப்புக்கீரை மசியல் 1 : நான் திருவனந்தபுரத்தில் வசித்து வந்த போது #கீரை என்றாலே சிகப்பு தண்டு கீரைதான் கிடைக்கும். இந்த தண்டு கீரையின் இலைகள் சிறிது அழுத்தமாக இருக்கும். அதனால் பொரியல் செய்தால் மட்டும்தான் சுவைக்க முடியும். கூட்டோ அல்லது மசியலோ செய்தால் சுவை அவ்வளவு நன்றாக இருக்காது.
ஆனால் நான் ராய்ப்பூரில் வசித்த போது சிகப்பு முளை கீரை அதிகமாக கிடைக்கும். மிகவும் இளையதாகவும் நல்ல பீட்ரூட் நிறத்தை கொண்டதாகவும் இருக்கும். சுவையும் மிக மிக அருமையாக இருக்கும். #சிகப்புமுளைக்கீரை, சுருக்கமாக #சிகப்புக்கீரை கொண்டு செய்யப்படும் மசியல் எனக்கு மிகவும் பிடித்த சமையல் ஆகும். இப்போது இதனை கொண்டு மசியல் செய்யும் முறையை காணலாம்.


சிகப்புக்கீரை மசியல்



தேவையான பொருட்கள் :
ஒரு கைப்பிடிசிகப்பு முளை கீரை
2 or 3பூண்டு பற்கள்
1/4 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]

செய்முறை :
சிகப்பு முளைக்கீரையை தண்ணீரில் இரண்டு மூன்று முறை நன்கு கழுவி தண்ணீரை வடித்து விடவும்.
குக்கரில் அரை கப் தண்ணீர் விட்டு கீரையை சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி அடுப்பின் மேல் வைத்து அதிக தீயில் சூடாக்கவும்.
ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கி நீராவியை வெளியேற்றவும்.
அல்லது குழாயின் அடியில் வைத்து தண்ணீரை குக்கரின் மேல் ஓட விடவும்.
நீராவி உடனே அடங்கி விடும்.
குக்கரை திறந்து வெந்த கீரையை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து ஆற விடவும்.

கீரை வெந்த தண்ணீரை கீழே கொட்டி விடாதீர்கள்.
அதை ரசத்திலோ அல்லது சாம்பாரிலோ சேர்க்கலாம்.

மிக்ஸியில் உறித்த  பூண்டு பல்லை போட்டு ஒரு சுற்று சுற்ற விடவும்.
பிறகு திறந்து கீரையையும் உப்பையும் சேர்த்து சில மணித்துளிகள் அரைக்கவும்.

திப்பி திப்பியாக இருக்க வேண்டும். மைய அரைக்கக் கூடாது.

சூடான சாதத்தில் ஒன்றிரண்டு தேக்கரண்டி கீரை மசியலை போட்டு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு பிசைந்து முருங்கைக்காய் சாம்பார் அல்லது வத்தக்குழம்பு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ... சுவையே அலாதிதான்!!


Grind coarsely cooked Red Amaranth greens with salt and garlic.








சில சமையல் வகைகள் சமைக்க ருசிக்க


பாலக் மசியல்
பாலக் கீரை மசியல்
சிகப்பு முளை கீரை மசியல்
சிகப்பு கீரை மசியல்
பால் சாறு ( அ ) கழனி சாறு
பால் சாறு
முள்ளங்கி கீரை பொரியல்
முள்ளங்கிகீரை ..
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை



இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment