Search This Blog

Saturday, December 19, 2015

7 Cup Burfi

#ஏழுகப்பர்பி [ #7cupBurfi ] : ஒரு கப் கடலை மாவு, ஒரு கப் தேங்காய் துருவல், ஒரு கப் பால், ஒரு கப் நெய், மற்றும் மூன்று கப் சர்க்கரை ஆக மொத்தம் ஏழு கப் பொருட்களை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பாகும். மிகவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு இனிப்பாகும். இந்த இனிப்பில் நான் வாசனை வரும் வரை வறுத்த ஆளி விதையை சேர்த்து செய்து பார்த்தேன். இனிப்பின் சுவையும் மணமும் சிறிது தூக்கலாக அமைந்தது.
இனி செய்முறையை காண்போம். 

ஏழு கப் பர்பி - 7 cup Burfi

தேவையான பொருட்கள் :
1/2 கப்கடலை மாவு
1/2 கப்தேங்காய் துருவல்
1/2 கப்நெய்
1/2 கப்பால்
1 1/2 கப்சர்க்கரை
1/2 Tspஏலக்காய் பொடி
1 Tspஆளி விதை [ flax seeds ]
1 Tspசர்க்கரை தூவுவதற்கு

செய்முறை :
வெறும் வாணலியில் ஆளிவிதையை மிதமான தீயில் படபடவென பொறியும் வரை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.

ஒரு சுத்தமான ஈரமில்லாத தட்டின் மேல் நெய் தடவி தயாராக வைக்கவும்.

அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரத்தை வைத்து சூடாக்கவும்.
அதில் 2 tsp நெய் விட்டு கடலை மாவை வாசனை வரும் வரை வறுக்கவும்.
கடலை மாவின் நிறம் மாறாமல் பார்த்துக்கொள்ளவும்.
மாவு வறுபட்டவுடன் தேங்காய் துருவலை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வறுக்கவும்.
பிறகு காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்க்கவும்.
இடது கையால் பாலை சேர்த்துக்கொண்டே வலது கையால் துடுப்பினால் கலக்கிகொண்டே கலக்கவும். அப்போதுதான் மாவு கட்டி தட்டாமல் இருக்கும்.
மாவு வெந்தவுடன் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
அடுத்து நெய்யை சேர்த்து மிதமான அல்லது சிறிய தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
கிளற கிளற சிறிது கெட்டிபட்டுக்கொண்டே வரும்.
காற்று குமிழிகள் தோன்ற ஆரம்பிக்கும்.
அந்த தருணத்தில் ஏலக்காய் போடி சேர்த்து கிளறவும்.
அடுத்து வறுத்து வைத்துள்ள ஆளி விதையை சேர்த்து கிளறவும்.
கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒரு தருணத்தில் ஒன்றாக சேர்ந்து காற்று குமிழிகளுடன் மேல பொங்கி எழும்பி வரும்.
அப்போது உடனே நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டவும்.
தட்டை மேடையின் மேல் டப் டப் என தட்டி கொட்டிய பர்பியை சமன் படுத்தவும்.
உடனேயே சர்க்கரையை இனிப்பின் மேல் தூவவும்.
ஒரு ஐந்து நிமிடங்கள் ஆற வைத்த பின்னர் சுத்தமான ஈரமில்லாத கத்தியில் துண்டுகள் போடவும்.
ஆளிவிதையின் வாசனையுடன் கூடிய சுவையான ஏழு கப் பர்பி தயார்.

7 cup Burfi




மேலும் சில இனிப்பு வகைகள் முயற்சி செய்து பார்க்க

தூத் பேடா மைக்ரோவேவ் முறை ரசகுல்லா ரவா உருண்டை
ஆளி விதை உருண்டை சாக்லேட்