Search This Blog

Monday, June 1, 2015

Kaezhvaragu-Dosai

#கேழ்வரகுதோசை  [ #கேவுருதோசை ] : #கேழ்வரகு #சிறுதானியம் வகையை சேர்ந்தது ஆகும். இதனை #கேவுரு என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் #FingerMillet என்று கூறப்படுகிறது.
மற்ற சிறு தானிய வகைகள், அரிசி மற்றும் கோதுமையை விட அதிக அளவில் கால்சியம் சத்து கேழ்வரகில் நிறைந்துள்ளது.
சென்ற முறை இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து எப்போதையும் விட சிறிது அதிகமாக உப்பி வந்தது. அதனால் அதிலிருந்து இரண்டு கை அளவு தனியாக எடுத்து வைத்தேன். அதனுடன் கேழ்வரகு மாவை சேர்த்து உடனே தோசை சுட்டெடுத்தேன். மிக மிக சுவையாக இருந்தது.
முன்பு ஒரு பதிவில் உடனே செய்யக்கூடிய கேழ்வரகு தோசை செயல் முறை விளக்கத்தை கொடுத்திருக்கிறேன்.
இந்த கேழ்வரகு தோசை மற்றொரு உடன் செய்யும் தோசை ஆகும்.
இனி செய்முறையை காண்போம்.

கேழ்வரகு தோசை


தேவையான பொருட்கள் :
1 கப்கேழ்வரகு மாவு [ ragi flour ]
3/4 கப்அரைத்த உளுந்து மாவு 
1/2 கப்புளித்த தயிர்
1 Tspசீரகம்
1/4 கப்வெங்காயம் நறுக்கியது
1 Tspபச்சை மிளகாய்
8 - 10கறுவேப்பிலை
1 Tspஉப்பு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா மாவையும் எடுத்துக்கொள்ளவும்.
உப்பு மற்றும் தயிர் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
மாவில் சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் கிள்ளிய கறுவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
எண்ணெய் தடவி வட்டமாக தோசை சுடவும்.
தோசையின் மேலேயும் சுற்றியும் சில துளிகள் எண்ணெய் விடவும்.
ஓரம் சிவக்க ஆரம்பித்ததும் திருப்பி போட்டு வேக விடவும்.
இரண்டு பக்கமும் நன்றாக சுட்ட பின் தட்டில் எடுத்து வைக்கவும்.
மறுபடியும் எண்ணெய் தடவி அடுத்த தோசை சுடவும்.
மெத்து மெத்தென்ற சுவையான தோசை தயார்.
தேங்காய் சட்னி அல்லது வேறு விருப்பமான சட்னி யுடன் சுவைக்கவும்.

கேவுரு தோசை கேழ்வரகு தோசை [ கேவுரு தோசை ]
குறிப்பு :
விருப்பமானால் வெந்தய கீரையை அரிந்து சேர்த்தும் தோசை சுடலாம்.





மேலும் சில தோசை வகைகள் முயற்சி செய்து பார்க்க

தினை தோசை
தினை தோசை
ரவா தோசை
ரவா தோசை
கேழ்வரகு தோசை
கேழ்வரகு தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை




No comments:

Post a Comment