Search This Blog

Friday, May 22, 2015

Thinai-Fruit-Custard

#தினைபழகஸ்டர்ட் : #தினைபழபாயசம் எனவும் அழைக்கலாம். #தினை #சிறுதானியம் வகைகளுள் ஒன்றாகும். இத்தானியம் தங்க நிறத்தில் தகதகவென இருக்கும். இதில் இரும்பு சத்தும் துத்தநாகமும் மற்ற தானியங்களை விட மிக அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால் நமது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
இத் தானியம் சிறிது இனிப்பு சுவை கொண்டது. அதனால் இனிப்பு வகைகள் செய்ய மிகவும் ஏற்றது.
பொதுவாக கஸ்டர்ட் பழ கலவை வாசனை கலக்கப்பட்ட சோள மாவு கொண்டே தயாரிப்பது வழக்கம். தினை பாயசம் சாப்பிடும் போது எனக்கு இதன் முழு தானியத்தில் இருந்து எடுக்கப் படும் பாலை சிறிது கெட்டியாக காய்ச்சி பழங்களை சேர்த்து சாப்பிட்டால் என்ன என்று யோசனை தோன்றியது.. மிக சமீபமாக காரட் தினை பாயசம் சாப்பிடும் போது உடனே முயற்சி செய்ய வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டேன். உடனே செயலிலும் இறங்கி செய்து பார்த்தேன். மிக மிக ருசியாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.
இப்போது தீட்டப்படாத தினை முழு தானியத்தை உபயோகித்து எவ்வாறு பழ கஸ்டர்ட் செய்யலாம் என காண்போம்.

தினை பழ கஸ்டர்ட்


தேவையான பொருட்கள் :
1/3 கப்தினை [Foxtail millet ] முழு தானியம்
1 கப்காய்ச்சிய பால் 
1/3 கப்சர்க்கரை [ adjust ]
1 சிட்டிகைஉப்பு
1/4 Tspவெனிலா எஸ்சென்ஸ்
1வாழைப் பழம்
1/3 cupஆப்பிள் துண்டுகள்
1 Tspமாதுளை முத்துகள்

செய்முறை :
தினையை கழுவி விட்டு ஒரு கிண்ணத்தில் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி ஆற வைக்கவும்.
குறிப்பிட்ட மணி நேரம் கழித்து மிக்சியில் 1/4 கப் தண்ணீர் விட்டு அரைத்து ஒரு டீ வடிக்கட்டியின் மூலம் வடிகட்டவும்.
வடிகட்டியதை மற்றுமொரு முறை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து மறுபடியும் அதே பாத்திரத்தில் வடி கட்டிக்கொள்ளவும்.
மூன்றாவது முறையும் மிக்ஸியில் அரைத்து பால் எடுத்து அதே பாத்திரத்தில் வடி கட்டவும்.
வடிகட்டிய கரைசல் பால் போல இருக்கும்.
இதனை தினை பால் என்று இனி அழைக்கலாம்.

டீ வடிகட்டியில் தங்கும் தினை உமியை தூக்கி எறிந்து விடவும்.

இப்போது காய்ச்சிய பால், தினை பால், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
மிதமான தீயில் அடுப்பின் மீது வைத்து கை விடாமல் கலக்கிக் கொண்டே இருக்கவும்.
இல்லையெனில் அடி பிடித்து விடும்.
சிறிது நேரத்தில் கஞ்சி பதத்தை அடைந்து பளபளப்பாக மாறும்.
நன்கு கெட்டியான கஞ்சி பதத்தை அடைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு வெனிலா எஸ்சென்ஸ் சேர்த்து கலக்கி விடவும்.
சிறு சிறு கிண்ணத்தில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டியில் அல்லது சாதாரண அறையில் நன்கு ஆற விடவும்.
நன்கு ஆறிய பின்னர் கெட்டியாக செட் ஆகி விடும்.
பின்னர் தங்களுக்கு விருப்பமான பழங்களை சேர்த்து சுவைக்கவும்.
தினைக்கே உரிய மணத்துடன் மிக மிக சுவையாக இருக்கும் இந்த தினை பழ பாயசம் [தினை கஸ்டர்ட் ]!!

thinai whole grain [ foxtail millet ]
Thinai Custard
நான் இந்த கஸ்டர்ட் செய்த அன்று வீட்டில் வாழைப் பழம் மட்டுமே இருந்ததால் அதனை மட்டுமே நறுக்கி போட்டு பரிமாறி உள்ளேன்.

தினை பழ கஸ்டர்ட்




மற்றும் சில இனிப்பு வகைகள் முயற்சி செய்து பார்க்க 

திணை பால் பாயாசம் தினை பொட்டுக்கடலை உருண்டை தினை மாவு உருண்டை தினை பாயசம் 1





No comments:

Post a Comment