Search This Blog

Friday, April 17, 2015

Chola Dosai

#சோளதோசை : #சோளம் புன்செய் பயிர்களில் ஒன்று மற்றும் #சிறுதானியம் வகையை சேர்ந்தது ஆகும். இந்தியாவில் மிக அதிகமாக விளைவிக்கப்படும் தானியம் ஆகும். இதனை கொண்டு சோள இட்லி, சோள குழிபணியாரம் ஆகியவை தயாரிக்கும் முறையை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.
அரிசி, சோளம் மற்றும் உளுந்து ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து மாவு அரைக்கும் இயந்திரத்தில் ஒன்றாக அரைத்து புளிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அவரவர் விருப்பப்படி மெத்து மெத்தென்றொ அல்லது முறுவலாகவோ தோசை சுட்டு சாப்பிடலாம்.
இனி செய்முறையை காண்போம்.

சோள தோசை

தேவையான பொருட்கள் :
ஊற வைக்க :
1 கப்சோளம்
1 கப்இட்லி அரிசி
1/2 கப்உளுத்தம் பருப்பு
1/2 Tspவெந்தயம்
மாவுடன் சேர்க்க :
2 Tbspரவா
2 Tspஉப்பு
தோசை சுடுவதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை :
ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று முறை நன்றாக கழுவி விட்டு தேவையான தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

மூன்று மணி நேரம் கழித்து மாவு அரைக்கும் இயந்திரத்தை கழுவிய பிறகு ஊற வைத்த பொருட்களை போட்டு அரைக்கவும்.
அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்து ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலந்து வைக்கவும்.
6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து வைத்து மறுநாள் காலை தோசை ஊற்றலாம்.
மாவு புளித்த பிறகு ரவா சேர்த்து கலக்கி வைக்கவும்.
இட்லி மாவை விட தளர இருக்க வேண்டும்.
தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி வைக்கவும்.
அரை மணி நேரம் ஊற விடவும்.
அரை மணி நேரம் கழித்து அடுப்பின் மேல் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடேற்றவும்.
ஒரு சுத்தமான மெல்லிய துணியில் எண்ணெய் நனைத்து தடவவும்.
சரியான சூடானவுடன் மாவை தோசை கல்லின் நடுவில் வைத்து வட்டமாக பரப்பவும்.
தோசையின் மேல் சில துளிகள் எண்ணெய் தெளிக்கவும்.
தோசை ஓரம் சிவக்க ஆரம்பித்தவுடன் தோசை திருப்பியினால் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதைபோல மீண்டும் மாவை பரப்பி தோசை சுட்டெடுக்கவும்.

சோள தோசை

சூடான சோள தோசையை தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சுவைக்கவும்.

சோள தோசை

ஹோட்டல் தோசை போல முறுகலாக வேண்டும் என்றால் தட்டையான கிண்ணம் கொண்டு மாவை தோசை கல்லின் மேல் மெல்லியதாக பரப்பி சிறிது தாராளமாக எண்ணெய் ஊற்றி பொன் முறுவலாக சுட்டு எடுக்கவும்.




மேலும் முயற்சி செய்ய 

சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை





No comments:

Post a Comment