Search This Blog

Wednesday, April 29, 2015

Chola-Appam

#சோளஆப்பம் : இப்போது நான் வசிக்கும் வட கர்நாடகாவில் #சோளம் அதிக அளவில் உபயோகப்படுத்துகிறார்கள். நானும் சோளம் உபயோகித்து சோள இட்லி, சோள தோசை, மற்றும் குழி பணியாரம் செய்து பார்த்தேன். மிக மிக ருசியாக இருந்தது. அதனால் அடுத்து ஆப்பம் செய்து பார்த்தேன். ஆப்பமும் நன்றாக செய்ய முடிந்தது.
இட்லி அரிசி, பச்சரிசி, சோளம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்துகொள்ள வேண்டும். வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பு - துவரம் பருப்பு ஆகியவற்றை தனியாக ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் தனித்தனியாக அரைத்தெடுத்து உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்க வேண்டும். புளித்த பின்னர் தோசை கல்லிலோ அல்லது ஆப்ப சட்டியிலோ ஆப்பம் சுட்டெடுக்க வேண்டும்.

*வெந்தயத்தை முதல் நாளே ஊறவைத்து முளை கட்டியும் சேர்க்கலாம்.

இங்கு இப்போது சோள ஆப்பம் செய்முறையை காண்போம்.

தோராயமாக 25 முதல் 30 ஆப்பம் தயார் செய்யலாம்.

சோள ஆப்பம்

தேவையான பொருட்கள் :
1 கப்இட்லி அரிசி
1 கப்சோளம்
2 கப்பச்சரிசி
1/8 கப்உளுத்தம் பருப்பு
1/8 கப்துவரம் பருப்பு
1/8 கப்வெந்தயம்
4 Tspஉப்பு
செய்முறை :
வெந்தயத்தை ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து கழுவி விட்டு 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெந்தயம் ஊற வைத்து 3 அல்லது 4 மணி நேரம் கழித்து இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் சோளம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கழுவிய பின்னர் தேவையான தண்ணீர் விட்டு 3 மணி நேரம்  ஊறவைக்கவும்.
அதே போல மற்றொரு பாத்திரத்தில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கழுவிய பின்னர் தேவையான தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
குறிப்பிட்ட நேரம் ஊறிய பின்னர் கிரைண்டரை கழுவி முதலில் வெந்தயம் மற்றும் மற்ற இரண்டு பருப்பையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். ஊறவைத்த தண்ணீரையும் அரைக்கும் போது சேர்க்கவும்.
அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு பந்து போல உப்பி வரும் வரை அரைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அரிசி மற்றும் சோளத்தை நன்கு மைய அரைக்கவும். வழிப்பதற்கு முன் 4 Tsp உப்பு சேர்த்து விடவும்.
இந்த மாவை வழித்து முன்பு பருப்பு-வெந்தயம் மாவு எடுத்து வைத்துள்ள அதே பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அரை கப் தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவை கழுவி பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
கையினால் நன்கு கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை அல்லது இரவு அரைத்து மறு நாள் காலை ஆப்பம் ஊற்றலாம்.

ஆப்ப மாவு புளித்த பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் தோசை கல்லை சூடாக்கவும்.
ஒரு சுத்தமான துணியினால் எண்ணெய் தடவி சூடானதும் நடுவில் மாவை வைத்து பரப்பி விடவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
ஆப்பத்தை திருப்பிப் போட்டு வேக விட வேண்டாம்.
இலேசாக சிவந்து வெந்த ஆப்பத்தை தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்த ஆப்பம் சுட முன்பு போலவே எண்ணெய் தடவி ஆப்பம் சுட்டு எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே தேங்காய் சட்னி அல்லது பூண்டு மிளகாய் சட்னி அல்லது வெல்லம் சேர்த்த தேங்காய் பால் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

சோள ஆப்பம் சோள ஆப்பம்
குறிப்பு :
*வெந்தயத்தை முளை கட்ட,
மாவு அரைப்பதற்கு முதல் நாள் மாலை அல்லது இரவே வெந்தயத்தை கழுவி ஒரு கிண்ணத்தில் ஊற வைக்கவும்.
அரைக்கும் நாள் காலையில் ஊறிய தண்ணீரை வேறொரு சிறிய கிண்ணத்தில் வடித்தெடுத்து விடவும். ஊற வைத்த  தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டாம். மாவு அரைக்கும் போது சேர்த்து விடலாம்.
இப்போது ஊறிய வெந்தயத்தை முளைக்கட்டுவத ற்காக ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.



முயற்சி செய்து பார்க்க
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் கேரளா ஸ்டைல்
ஆப்பம் கேரளா 1
ஆப்பம் கேரளா ஸ்டைல் 2
ஆப்பம்கேரளா 2

ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க



No comments:

Post a Comment