Search This Blog

Friday, December 5, 2014

Vazhaipoo Kuzhambu

#வாழைப்பூகுழம்பு : #வாழைப்ப்பூ துவர்ப்பு சுவைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அறுசுவையில் ஒரு சுவையுடைய இந்த வாழைப்பூவை தவறாமல் வாரத்தில் ஒரு முறையேனும் சேர்த்துக் கொள்வது நலம்.
இங்கு இதனை கொண்டு ஒரு வித்தியாசமான குழம்பு செய்முறையை காண்போம்.

வாழைப்பூ குழம்பு


தேவையான பொருட்கள் :
அரைக்க :

1 1/2 Tsp                                சீரகம்
1 Tsp                                      மிளகு
2 or 3                                      சிகப்பு மிளகாய்
1/2 Tsp                                   கச கசா
15 to 20                                  சின்ன வெங்காயம் [ sambar onion ]
1/2                                          தக்காளி


மற்ற பொருட்கள் :
1 cup                                   வாழைப்பூ நறுக்கியது{ பூவின் நடு காம்பை நீக்கியபின் }
2                                          காளான் [ விரும்பினால் ]
கோலிகுண்டு அளவு  புளி சுடு தண்ணீரில் ஊற வைக்கவும்
1                                          வெங்காயம், நறுக்கி வைக்கவும்
1/2                                       தக்காளி வெட்டிவைக்கவும்
10                                        கறுவேப்பிலை
1/4 Tsp                                மஞ்சத்தூள்
1 Tsp                                    உப்பு
4 Tsp                                    நல்லெண்ணெய் [ till / sesame oil ]
1 Tsp                                     கடுகு

செய்முறை :
முதலில் அரைப்பதற்கு தயார் செய்து கொள்வோம்.
வெங்காயத்தை மைக்ரோவேவிற்குள் வைக்கக் கூடிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். ஓரிரு துளிகள் எண்ணெய் விட்டு கலக்கி விடவும்.
1 நிமிடத்திற்கு HIGH யில் வைத்து மைக்ரோவேவ் செய்யவும்.
அதே கிண்ணத்தில் வெங்காயத்துடன் தக்காளி துண்டுகளையும் சேர்த்து எண்ணெய் சில துளிகள் விட்டு கலக்கி மேலும் 1 1/2 நிமிடம் மைக்ரோவேவ் செய்யவும். அல்லது தக்காளி மிருதுவாகும் வரை மைக்ரோவேவ் செய்யவும்.
வெளியில் எடுத்து ஆற விடவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாய் மற்றும் மிளகை வறுத்தெடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் சீரகத்தை வறுத்து எடுக்கவும்.
இப்போது வறுத்த பொருட்கள், மைக்ரோவேவ் செய்த பொருட்கள் மற்றும் கசகசா சேர்த்து மைய மிக்ஸியில் அரைத்து எடுத்து தயாராக வைக்கவும்.


மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு ஒட்டிக் கொண்டிருக்கும் மசாலாவையும் கழுவி அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 3 அல்லது 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
கடுகு தாளித்த பின் கறுவேப்பிலை மற்றும் மஞ்சத்தூள் சேர்க்கவும்.
பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வெளிர் நிறமாக மாறி வாசனை வர ஆரம்பித்தவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கிய பின்னர் வாழைப்பூவை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர் தண்ணீர் 1/4 கப் ஊற்றி மூடி வேக விடவும்.
வாழைப்பூ வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் கழுவிய தண்ணீரையும் சேர்க்கவும்.
மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.





பிறகு புளியை 1/3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி கொதித்து கொண்டிருக்கும் குழம்பில் ஊற்றி உப்பையும் சேர்க்கவும்.
புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

வாழைப்பூ குழம்பு வாழைப்பூ குழம்பு

அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சூடான சாதத்துடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு கலந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

வாழைப்பூ குழம்பு


குறிப்பு :
மைக்ரோவேவ் இல்லாவிடின் வாணலியிலேயே வெங்காயத்தையும் தக்காளியையும் வதக்கிக் கொள்ளலாம்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்ப்பதற்காக

குதிரைவாலி வாழைப்பூ புலாவ் வாழைப்பூ பருப்பு உசிலி வாழைப்பூ மிளகு குழம்பு
வாழைப்பூ வடை மோர் குழம்பு வாழைப்பூ விரல்கள்



6 comments:

  1. வித்தியாசமான ரெசிபி. முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது. வாழ்த்துக்கள்
    பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/01/2_21.html?showComment=1421802621436#c6674180774255170451
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் அவர்களே,
      இணைப்பை சொடுக்கி எனது வலைதளத்தை அறிமுகப் படுத்தி இருப்பதை பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
      தங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது.
      தங்களுடைய வலைதளத்தை நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று பார்க்கிறேன்.
      நன்றி.

      Delete
  3. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://ponnibuddha.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam,
      தங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது.
      தங்களுடைய வலைதளங்களை நேரம் கிடைக்கும் போது கட்டாயம் சென்று பார்க்கிறேன்.
      நன்றி.

      Delete
  4. இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
    வாழ்த்துக்கள்!
    ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு
    திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
    பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
    படைப்புகள் யாவும்.
    நட்புடன்,
    புதுவை வேலு,
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete