Search This Blog

Friday, December 12, 2014

Amaranth-Kevuru-Mittai



#அமராந்த்கேவுருமிட்டாய்  #அமர்நாத்கேழ்வரகுமிட்டாய் : இதுவரை #அமராந்த் [ #அமராந்தம் ] விதைகளை அல்லது மாவை உபயோகப் படுத்தி உணவு தயாரித்து வந்தோம். இப்போது #அமராந்த்பொரி கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு மிட்டாய் பற்றி இங்கு காண்போம். இதனுடன் கேழ்வரகு [ கேவுரு ] அவலையும் உபயோகப்படுத்தி உள்ளேன்.
இனி செய்முறையை காண்போம்.

அமராந்த் கேவுரு மிட்டாய் [ Amaranth Ragi Chikki ]

தேவையான பொருட்கள் :
1 cupஅமராந்த் பொரி [ Puffed Amaranth ]
1/4 cupகேழ்வரகு அவல் [ Ragi Flakes ]
3/4 cupவெல்லம்
1/4 Tspஏலக்காய் பொடி [ optional ]
சிறிதளவு அரிசி மாவு.
செய்முறை :
அமராந்த்பொரி மற்றும் கேழ்வரகு அவல் இரண்டையும் அளந்து எடுத்து வைக்கவும்.
ஒரு ஈரமில்லாத சுத்தமான தட்டில் அரிசிமாவை தூவி தனியே வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை பொடித்து போட்டு 1/2 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கவும்.
கரண்டியால் கலக்கி வெள்ளத்தை கரைக்கவும்.
வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
வெல்ல கரைசலை மற்றொரு பாத்திரத்தினுள் வடிகட்டவும்.

வடிகட்டிய வெல்லத்தை அடுப்பில் மிதமான தீயில் சூடாக்கி பாகு காய்ச்சவும்.


கரண்டியால் அவ்வப்போது கலக்கி விடவும்.
பாகை சிறிய கிண்ணத்தில் உள்ள தண்ணீரில் விட்டால் கரையக்கூடாது.
உருட்டினால் பந்து போல வரவேண்டும்.
அது வரை அடுப்பில் பாகு காய்ச்ச வேண்டும்.
இந்த உருட்டிய வெல்ல பந்து பாத்திரத்தில் போட்டால் டன்னென்ற சத்தம் போட வேண்டும்.

right consistency

பாகு தயாரானதும் அடுப்பை மிகவும் சிறிய தீயில் வைத்து, எடுத்து வைத்துள்ள பொரி மற்றும் அவலை சேர்த்து கிளறவும்.
நன்கு கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அரிசி மாவு பரப்பிய தட்டின் மேல் கொட்டி பரப்பவும்.

Amaranth Mittai [ Puffed Amaranth Chikki ]

கத்தியால் துண்டுகள் போடவும்.
சுவையான மிட்டாய் தயார்.

அமராந்த் கேவுரு மிட்டாய் [ Amaranth Ragi Chikki ]


2 comments:

  1. Amaranth என்பது என்ன தமிழில் என்ன சொல்வோம்? ஸ்வீட் செய்முறை எளிதாக இருக்கிறது. ஆரோக்கியமானதும் என்றும் தோன்றுகிறது. நெய் எதுவும் இல்லை போலிருக்கிறதே.. தமிழ் நாட்டில் நீங்கள் சொல்லும் அமரந் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. அமராந்தம் அல்லது அமராந்த் அல்லது அமர்நாத் விதைகள் என்றே தமிழிலும் கூறப்படுகிறது.
      இவை கீரை விதைகளே. எனக்கு சென்னையில் எங்கு கிடைக்கும் என தெரியாது. ஆனால் சிறு தானியங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கலாம்.

      Delete