Search This Blog

Tuesday, November 25, 2014

Colacasia Curry

#சேப்பங்கிழங்குகறி : இந்த கிழங்கை பற்றி மேலும் அறிய கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://en.wikipedia.org/wiki/Taro

இந்த கிழங்கை கொண்டு சாம்பார் மற்றும் கறி செய்யலாம். கேரளாவில் இருந்த போது இக்கிழங்கை கொண்டு செய்யப்பட்ட வறுவலை சுவைத்திருக்கிறேன்.
இங்கு சேப்பங்கிழங்கு கறி செய்வதெப்படி என காணலாம்.

சேப்பங்கிழங்கு கறி


தேவையான பொருட்கள் :
1/4 kg                                         சேப்பங்கிழங்கு
1                                                 வெங்காயம், நீள துண்டுகளாக நறுக்கவும்
1                                                 தக்காளி, பொடியாக நறுக்கவும்
10                                               கறுவேப்பிலை

தேவையான பொடிகள் :
1 pinch                                        மஞ்சத்தூள்
1/2 Tsp                                        சிகப்பு மிளகாய் தூள் [ adjust ]
1/4 Tsp                                        சீரகத்தூள்

தாளிக்க :
4 Tsp                                           எண்ணெய்
1/2 Tsp                                       கடுகு
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
1 pinch                                      பெருங்காய தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க.

செய்முறை :
கிழங்கை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
குக்கரினுள் வைத்து மூன்று விசில் மற்றும் குறைந்த தீயில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஆவி அடங்கிய பின்னர் எடுத்து தோலை உறிக்க முடிந்தால் கிழங்கு வெந்து விட்டதாக அர்த்தம்.
இல்லாவிடின் மறுபடியும் சிறிது நேரம் வேக வைக்கவும்.

தோலை அகற்றி தனியே எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகை வெடிக்க விட்ட பின்னர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுக்கவும்.
பெருங்காயத்தூள் சேர்த்த பின்னர் கறுவேப்பிலை, அதனை அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிறிது வெளிர் நிறமாக மாறியவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
கிழங்கை ஒரே அளவு துண்டுகளாக்கி சேர்த்து பிரட்டவும்.
நன்கு கிளறி விடவும்.
ஓரிரு நிமிடங்கள் ஒரு தட்டினால் மூடி வைக்கவும்.
தண்ணீர் சுண்டி கிழங்கின் மேல் தக்காளி கலவை நன்கு பூசினாற்போல வந்தவுடன் பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைத்து கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.


சேப்பங்கிழங்கு கறி தயார்.

சேப்பங்கிழங்கு கறி

கலந்த சாதம், சாம்பார் சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




மற்ற சமையல் குறிப்புகள்

சேப்பங்கிழங்கு மசாலா கறி






No comments:

Post a Comment