Search This Blog

Wednesday, October 15, 2014

Vazhaipoo-Carrot-Poriyal

#வாழைப்பூகாரட்பொரியல் : எனது முந்தைய பதிவில் #வாழைப்பூ பொரியல் செய்வதெப்படி என பார்த்தோம். துவர்ப்பு சுவையுடன் அருமையாக இருந்திருக்குமே!! குழைந்தைகள் இது என்ன பொரியல்! இதனை யார் சாப்பிடுவது?!! மிகவும் துவர்க்கிறதே!! என்கிறார்களா?!!
ம்ம்.. அதற்கும் ஒரு உபாயம் இருக்கிறது. குழைந்தைகளுக்கு #காரட் மிகவும் பிடிக்குமல்லவா? அதனோடு வாழைப்பூவை சேர்த்து பொரியல் செய்தால் இச்சுவை சிறிது மட்டுப்படும் அல்லது மறைக்கப்படும். சுவையும் அபாரமாக இருக்கும். அவர்கள் தானாகவே விரும்பி சாப்பிடுவார்கள்.
இனி எவ்வாறு செய்வது என காணலாம்.


வாழைப்பூ காரட் பொரியல்


தேவையான பொருட்கள் :
1 கப்வாழைப்பூ நறுக்கியது 
1/4 கப்காரட் துருவல் 
3 Tspதேங்காய் துருவல்
1/4 கப்வெங்காயம் வெட்டியது 
2 சிட்டிகைமஞ்சத்தூள் 
6 or 7கறுவேப்பிலை 
1 or 2சிகப்பு மிளகாய்
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
1/2 Tspஉப்பு
1 Tspஎண்ணெய்

செய்முறை :
வாழைப்பூவின் நடுவில் உள்ள காம்பை நீக்கி விட்டு அரிந்து மோரிலோ அல்லது தண்ணீரிலோ போட்டு வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்கவிடவும்.
பின்னர் மிளகாயை கிள்ளி போட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
பருப்பு சிவந்ததும் மஞ்சத்தூள் சேர்த்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிறிது வதங்கியதும் வழைப்பூவிலிருந்து தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு சேர்க்கவும்.
சில மணித்துளிகள் வதக்கிய பிறகு காரட் துருவலை சேர்க்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கிளறி விடவும்.
மூடி போட்டு வேக விடவும். 

வாழைப்பூவும் காரட்டும் வெந்த பிறகு மூடியை அகற்றி விடவும்.
தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறவும்.
அடுப்பை அணைத்து விட்டு பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

வாழைப்பூ காரட் பொரியல் வாழைப்பூ காரட் பொரியல்

மதிய உணவிற்கு ஏற்ற பொரியல் ஆகும். சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Nutritional Value of Banana Flower:
As per the Africa Journal of Biotechnology, banana flower nutrition per 100g is as follows:

51 kcal
1.6g of Protein
.6g of Fat
9.9g Carb
5.7fgof Fiber
56mg of Calcium
73.3mg of Phosphorous
56.4mg of Iron
13mg of Copper
553.3 mg of Potassium
48.7mg of Magnesium
1.07mg of Vitamin E


[source : banana flower ]



மேலும் சில வாழைப்பூ கொண்டு செய்யப்படும் உணவு வகைகள்


வாழைப்பூ பருப்பு உருண்டை வாழைப்பூ மசால் வடை வாழைப்பூ பசலை அடை
வாழைப்பூ முருங்கைக்கீரை கூட்டு பீட்ரூட் வாழைப்பூ பொரியல்



No comments:

Post a Comment