Search This Blog

Sunday, April 6, 2014

Ulundhu Vadai

#உளுந்துவடை : இதனை #மெதுவடை என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. உளுத்தம் பருப்பை ஊறவைத்து அரைத்து பின்னர் #வடை சுட்டு எடுப்பதுதான் முறை. ஆனால் மிக குறைந்த எண்ணிக்கையில் வடை தேவை படும் போது எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அரைபட்டு பொங்கி வந்தவுடன் ஒரு கை உளுத்தம் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தவும்.
காலையில் எடுத்து வைத்தால் மாலையில் உபயோகப்படுத்தி விட வேண்டும்.
இல்லையென்றால் மாவு புளித்து விடும். மேலும் எண்ணெயில் பொரிக்கும் போது அதிக எண்ணெயை குடிக்கும்.
இனி செய்முறையை காண்போம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                                          அரைத்த உளுத்த மாவு
2 Tbsp                                            ரவா
1 Tbsp                                            அரிசி மாவு
1/2 Tsp                                           உப்பு
1/2 Tsp                                           சீரகம்
1/4 கப்                                          பொடியாக நறுக்கிய கொத்தமல்லி
10                                                   கறுவேப்பிலை பொடியாக நறுக்கவும்
2 Tbsp                                            வெங்காயம் பொடியாக நறுக்கியது
1                                                     பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்

எண்ணெய் பொரிப்பதற்கு
விருப்பமானால் இஞ்சி துண்டுகளை சேர்க்கலாம்.
செய்முறை :
மாவுடன் ரவா கலந்து அரைமணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும், அரை மணி நேரம் கழித்து உப்பு மற்றும் அரிசி மாவை சேர்க்கவும்.


கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.


அடுப்பில் எண்ணெய் சட்டியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும்.

மாவை கலந்து வைக்கவும். சிறிது நீர்க்க இருந்தால் சிறிது அரிசி மாவை கலக்கிக் கொள்ளலாம்.


கையை ஈரப்படுத்திக் கொண்டு வட்டமாக தட்டி நடுவில் ஓட்டை இட்டு, எண்ணெய் நன்கு சூடானதும், போடவும்.
இரண்டு பக்கமும் திருப்பி விட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


எண்ணெய்  வடிய டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.


சாம்பார் அல்லது சட்னியுடன் சுவைக்கலாம்.
தாளித்த தயிரில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.

இதையும் செய்து பார்க்கலாமே!!

காலிப்ளவர் வடை 

No comments:

Post a Comment