Search This Blog

Friday, March 28, 2014

Vengaya Vadavam

#வெங்காயவடவம் : வெய்யில் காலத்தில் #சின்னவெங்காயம் மலிவாக கிடைக்கும் போது சின்ன வெங்காயத்தை அரிந்து தாளிக்கும் பொருட்களுடன் சேர்த்து காய வைத்து சேமித்து வைப்பது வழக்கம். இந்த வெங்காய வடவம் கூட்டு மற்றும் குழம்பு ஆகியவற்றில் தாளித்து கொட்ட பயன் படுத்துவார்கள். மேலும் வெங்காய வடவத்தை வறுத்து தேங்காய் சேர்த்து துவையல் அரைக்கலாம்.

சின்ன வெங்காயம் [சாம்பார் வெங்காயம் ]
சின்ன வெங்காயம் [சாம்பார் வெங்காயம் ]

இனி எவ்வாறு வெங்காய வடவம் செய்வது என காண்போம்.
இங்கு ஒரு கிலோ வெங்காயத்திற்கு தேவையான பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொள்ளும் வெங்காயத்தின் அளவிற்கு ஏற்றவாறு மற்ற பொருட்களை கூட்டி குறைத்துக் கொள்ளவும்.

தேவையான பொருட்கள் : 
1 கிலோ                                     சின்ன வெங்காயம்
20 பற்கள்                                   பூண்டு
1/4 கப்                                          கடுகு
1 Tsp                                             மஞ்சத்தூள்
1 Tsp                                             கருவேப்பிலை பொடி
அல்லது
20 - 25                                           கறுவேப்பிலை
2 Tbsp                                            உப்பு
2 Tsp                                             விளக்கெண்ணைய்

ஊற வைக்க :
3 Tbsp                                          உளுத்தம் பருப்பு
1 Tbsp                                          வெந்தயம்
1 Tbsp                                          சீரகம்

செய்முறை :
முதல் நாள் காலை/மதியம்  :
வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும்.
பூண்டின் தோலையும் நீக்கி விடவும்.

தோலுரித்த வெங்காயம்

முதல் நாள் மாலை/இரவு :
வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, மஞ்சத்தூள், உப்பு, கடுகு ஆகியவற்றை சேர்த்து கலக்கி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.

மற்றொரு சிறிய கிண்ணத்தில் ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கழுவி ஊற வைக்கவும்.

இரண்டாம் நாள் காலை : 
ஊற வைத்த தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக உடையுமாறு அரைத்துக்கொள்ளவும்.


அரைத்ததை வெங்காய கலவையுடன் சேர்த்து கலக்கவும்.

ஒன்று அல்லது இரண்டு பெரிய தட்டில் இந்த வெங்காய கலவையை பரப்பி வெய்யிலில் காய வைக்கவும்.


இரண்டாம் நாள் மாலை/இரவு :
விளக்கெண்ணையை விட்டு கைகளால் அழுத்தி பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வெங்காய வடவம்

மூன்றாம் நாள் :
நன்றாக வெய்யிலில் காய வைக்கவும்.

வெங்காய வடவம்

 நான்காம் நாள் காலை :
ஒவ்வொரு உருண்டையையும் மறுபடியும் கைகளால் அழுத்தி உருட்டவும்.
காய்ந்து போன பருப்புகள் சில கீழே உதிரும்.
அவற்றை தனியே ஒரு சிறு தட்டில் எடுத்து வைக்கவும்.
வெய்யிலில் நாள் முழுவதும் காய வைக்கவும்.

வெங்காய வடவம்

வெய்யிலில் மேலும் இரண்டு மூன்று நாட்களுக்கு நன்றாக காய வைக்க வேண்டும்.
பிறகு காற்றுப் புகா பாட்டிலில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.

வெங்காய வடவம்

தேவைக்கு இரண்டு உருண்டைகளை ஒரு சிறிய பாட்டிலில் அல்லது டப்பாவில் வைத்து உபயோகிக்கவும்.




வெங்காயத்தில் மற்றொரு வற்றல் :

வெங்காய வத்தல் 

No comments:

Post a Comment