Search This Blog

Friday, February 21, 2014

Peerkangkai kothamalli chutney

#பீர்கங்காய்கொத்தமல்லிசட்னி :
#பீர்கங்காய் தண்ணீர் சத்துள்ள சிறிது இனிப்பு சுவையுடன் கூடிய காய் ஆகும்.
இதனை கொண்டு சாம்பார், புளியுடன் சட்னி, துவையல், கூட்டு போன்ற பதார்த்தங்கள் செய்தால் சுவையாக இருக்கும்.
நான் வசிக்கும் ராய்ப்பூரில் பச்சை கொத்தமல்லி விதைகள் கிடைகின்றன. அவற்றை இந்த #சட்னி செய்ய உபயோகப் படுத்தி உள்ளேன்.
அதற்குப் பதிலாக கொத்தமல்லி தழையை அதிகமாக உபயோகப் படுத்தலாம்.
இனி செய்முறையை பார்ப்போம்.

பீர்கங்காய் கொத்தமல்லி சட்னி

தேவையான பொருட்கள் :

பீர்கங்காய்

1                                             பீர்கங்காய்
1 Tbsp                                     பச்சை கொத்தமல்லி விதைகள்
1/4 கப்                                     கொத்தமல்லி தழை அரிந்தது
2 அ 3                                      சிவப்பு மிளகாய்
1 1/2 Tsp                                  உளுத்தம் பருப்பு
சிறிய துண்டு                       இஞ்சி
கோலி  குண்டு அளவு        புளி
2 Tsp                                        எண்ணெய்

செய்முறை :
பீர்கங்காயை கழுவி ஒரே தடிமனான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
சூடானதும் மிளகாயை சிவக்க வறுக்கவும்.
பிறகு உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து தனியே வைக்கவும்.
இஞ்சி மற்றும் மல்லி விதிகளை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
எடுத்து தனியே வைக்கவும்.
அடுத்து சிறிது எண்ணெய் விட்டு பீர்கங்காய் துண்டுகளை வதக்கவும்.
பீர்கங்காய் மிருதுவாக வெந்தவுடன் தனியே எடுத்து வைக்கவும்.
வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களுடன் மற்ற பொருட்களையும் மிக்சியில் அரைத்து எடுக்கவும்.


சுவையான மல்லியின் மணத்துடன் கூடிய சட்னி தயார்.
ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

சூடான சாதத்தில் சேர்த்து பிசைந்து சாம்பாரை தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லிக்கு மற்றும் தோசைக்கும் அருமையாக இருக்கும்.

பீர்கங்காய் கொத்தமல்லி சட்னி






முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள்

கொத்தமல்லி தேங்காய் சட்னி தக்காளி கொத்தமல்லி சட்னி கொத்தமல்லி நெல்லிக்காய் தயிர் சட்னி

No comments:

Post a Comment