Search This Blog

Friday, February 21, 2014

Masaal Vadai

மசால் வடை : காலை சிற்றுண்டிக்கு பெரும்பாலும் உளுந்து வடை ஹோட்டெல்களில் பரிமாறப்படும். அது போல மாலை வேளையில்  ரோடோரத்து டீக் கடைகளில் டீயுடன் சாப்பிட மசால் வடை  தருவது பிரசித்தம்.
இப்போது இந்த மசால் வடை தயாரிக்கும் முறையை பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
ஊற வைக்கவும் :
3/4 கப்                                    கடலை பருப்பு
2 Tsp                                       உளுத்தம் பருப்பு
அரைக்க :
1 Tsp                                       சீரகம்
1 Tsp                                       சோம்பு
சிறு துண்டு                          இஞ்சி
2 அ 3                                      சிவப்பு மிளகாய்
1/2 Tsp                                     உப்பு
மாவில் சேர்க்க :
1/4 கப்                                   கொத்தமல்லி அரிந்தது
1                                            வெங்காயம், பொடியாக நறுக்கவும்
12                                          கருவேப்பிலை, பொடியாக நறுக்கவும்
3/4 கப்                                   எண்ணெய் பொரிக்க

செய்முறை:
பருப்பு இரண்டையும் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பிறகு தண்ணீரை சுத்தமாக வாடி கட்டி விடவும்.
முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் கொர கொரவென பொடிக்கவும்.
அதனுடன் ஊறவைத்த பருப்பை கொர கொரவென  அரைத்தெடுக்கவும்.
அரைப்பதற்கு தண்ணீர் சேர்க்கக் கூடாது.

ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


இப்போது அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
மாவில் சேர்க்க வேண்டிய பொருட்களை சேர்த்து பிசையவும்.


சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
எண்ணெய் நன்கு சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டையை உள்ளங்கைகளின் இடையே வைத்து சிறிது தட்டையாக்கி எண்ணெயில் போடவும்.


கரண்டியால் இரு பக்கமும் திருப்பி திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
அதிகப் படியான எண்ணெய் உறிஞ்ச டிஷ்யு காகிதத்தின் மேல் எடுத்து வைக்கவும்.
சோம்பு மணத்துடன் மொறு  மொறு வடை தயார்!!


சூடான காபி அல்லது டீயுடன் சுவைக்கவும்.

 





No comments:

Post a Comment