Search This Blog

Wednesday, February 12, 2014

Amaranth Khasa Khasaa Payasam

அமராந்த் கசகசா பாயசம்: 

அமராந்த் கசகசா பாயசம்

அமர்நாத் விதைகள் ஒரு கீரையின் விதையாகும். இதனை அமராந்தம் என்றும் அழைக்கப் படுகிறது. இதனை இங்கு சட்டிஸ்கரில் ராஜ்கிர் காரா என அழைக்கிறார்கள். இந்த விதைகள் கச கசா விதைகளை போலவே இருக்கும். ஆனால் கச கசாவை விட அளவில் சற்றே  பெரியது. நிறமும் சற்றேறக்குறைய அதைப் போலவே இருக்கும்.

Amaranth Seeds or Amarnath seeds 

அமர்நாத் கீரை & விதை பயன்கள் 
அமராந்த் 

அமராந்த் [ Amaranth ] என்பது தண்டு கீரை அதாவது முளை கீரை வகையை சார்ந்தது. இது பச்சை, பச்சை இலையில் நடுவே சிகப்பு, மற்றும் முழுவதும் சிகப்பு வண்ணத்தில் இலைகளை கொண்டது போன்ற  பல வகைகள் உள்ளன. சாப்பிடுவதற்காக சிலவற்றை பயிர் செய்யப்படுகிறது. சில அலங்கார செடியாக தோட்டத்தில் வளர்க்கப் படுகிறது.இந்த செடியின் தண்டு, இலை மற்றும் விதைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. இதனை பற்றி மேலும் அறிய

Amaranth Plant 

இந்த பாயசம்  தேங்காய் அரைத்து வெல்லத்துடன் செய்த பாயசம். பாலுடன் செய்த பாயசத்தை பிறிதொரு சமயம் பார்த்தோம். அதை விட வெல்லத்துடன் சேர்த்து செய்யும் போது சுவை இன்னும் அருமையாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள அளவில் சுமார் 1 1/2 முதல் 2 கப் தயாரிக்கலாம்.


தேவையான பொருட்கள் :
1 Tbsp                                       அம்ராந்த் விதைகள்
1 சிட்டிகை                             உப்பு
1/4 கப்                                       வெல்லம் ( அட்ஜஸ்ட் )

அரைக்க :


1/4 கப்                                      தேங்காய் துருவல்
1/2 Tsp                                       கச கசா
1/4 Tsp                                       அரிசி [ அ ] அரிசி மாவு
2                                                 ஏலக்காய்
சிறிய துண்டு                       ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரி
3                                                 முந்திரி பருப்பு [ இருந்தால் ]

சுவை கூட்ட :
நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் கிஸ்மிஸ்

செய்முறை :
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் நன்கு அரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் லேசாக சூடாக்கி கரைக்கவும்.
பிறகு வடிகட்டி வைக்கவும்.


வேக வைத்த அமராந்த் விதைகளை  கரண்டியால் மசித்து 1/2 கப் தண்ணீருடன் அடுப்பில் குறைந்த தீயில் சூடாக்கவும்.
வெல்ல கரைசலை விட்டு கலக்கவும்.
2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.


பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கொதிக்க விடவும்.


ஒன்று சேர்ந்து பதமாக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
நெய்யில் முந்திரி மற்றும் கிஸ்மிஸ் இரண்டையும் வறுத்து பாயசத்தின் மேல் கொட்டவும்.
மிக மிக சுவையான வரகரிசி தேங்காய் பாயசம் தயார்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து பரிமாறவும்.



  • தேங்காயையும் சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் சேர்க்கலாம்.
  • பொதுவாக பாயசத்தின் நிறம் வெல்லத்தின் நிறத்தை பொருத்தே அமையும்.
  • வெல்லத்தின் அளவை சுவைக்கேற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.


  • மற்ற அமராந்தம் சமையல் வகைகள்
    அமராந்தம் பாயசம் 1
    அமராந்தம் பாயசம் 2






    No comments:

    Post a Comment