Search This Blog

Monday, January 27, 2014

Veg Omelette

#சைவஆம்லெட் : சூப்பர் மார்கெட் சென்ற போது பயத்தம் மாவு வாங்கி வந்து விட்டேன். ஆனால் மிகுந்த நாட்களாக என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருந்தேன். பிறகுதான் அடை மாதிரி செய்யலாம் என முயற்சித்தேன். நன்றாக மெத்து மெத்தென்று மிருதுவாக வந்தது. அதனால் இந்த அடைக்கு சைவ ஆம்லெட் என பெயர் சூட்டி விட்டேன்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                                        பயத்தம் பருப்பு மாவு ( Green gram flour )
1 Tbsp                                         கடலை மாவு ( Besan )
1 Tsp                                           அரிசி மாவு
1/2 Tsp                                        உப்பு
1/2 Tsp                                        சீரகம்
1/2 Tsp                                        மிளகு துருவியது

மாவில் சேர்க்க :


1 சிறிய அளவு                   வெங்காயம் பொடியாக நறுக்கியது
3 Tbsp                                      காரட் துருவியது
2 Tbsp                                      குடை மிளகாய் பொடியாக நறுக்கியது
2 Tbsp                                      பாலக் ( அ ) பசலை கீரை  பொடியாக நறுக்கியது
3                                               காளான்  பொடியாக நறுக்கியது

அடையை சுடுவதற்கு தேவையான எண்ணெய்.

செய்முறை :
மேலே கொடுக்கப்பட்டுள்ள மாவு அனைத்தையும் 1/2 கப் தண்ணீர் விட்டு கலக்கவும்.
மற்ற பொருட்களையும் சேர்த்து கலக்கி அடை பதத்திற்கு கலக்கி 10 நிமிடங்கள் வைக்கவும்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் தடவி 1 1/2 கரண்டி மாவை நடுவில் வைத்து பரப்பவும்.
அடையின் மேலேயும் சுற்றியும் சில துளி எண்ணெய் விடவும்.


அடிப்பாகம் வெந்ததும் திருப்பிப் போட்டு சிவக்க எடுத்து பரிமாறவும்.


தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.











மேலும் சில சமையல் குறிப்புகள் செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
அவல் உப்புமா எலுமிச்சை அவல் உப்புமா சேமியா உப்புமா
பசலை கீரை பூரி சேமியா பாயசம்





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.







No comments:

Post a Comment