Search This Blog

Wednesday, January 29, 2014

Oats Dosai

#ஓட்ஸ்தோசை : எப்போதும் #ஓட்ஸ் என்றாலே கஞ்சி ஞாபகம்தான் வரும். ஒரு மாறுதலுக்காக தோசை செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. இந்த ஓட்ஸ் தோசையை முன்பு அடிக்கடி செய்து கொண்டிருந்தேன். இடையில் மறந்தே போய் விட்டேன். மறுபடியும் இரண்டு தினங்களுக்கு முன் செய்தேன். அந்த செய்முறையைதான் இங்கு தந்துள்ளேன்.


ஓட்ஸ் தோசை


தேவையான பொருட்கள் : 


1/2 கப்                        கோதுமை மாவு
1/2 கப்                          ஓட்ஸ்
1/3 கப்                         இட்லி அல்லது தோசை மாவு
1/2 Tsp                          உப்பு

மாவில் சேர்க்க :
1                                               வெங்காயம், பொடியாக அரியவும்
1                                               பச்சை மிளகாய், பொடியாக அரியவும்
10                                             கருவேப்பிலை
1 Tsp                                        சீரகம்
1/4 Tsp                                     ஓமம்

செய்முறை :
மாவு அனைத்தையும் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலக்கவும்.
மாவு நீர்க்க இருக்க வேண்டும்.

கருவேப்பிலையை  பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
சீரகம், ஓமம் மற்றும் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து கலக்கவும்.

காரமாக வேண்டுமெனில் பச்சை மிளகாயை பொடியாக வெட்டி அதையும் சேர்க்கவும்.

இந்த மாவை ஒரு அரை மணி நேரம் ஊற விடவும்.

அடுப்பில் தோசை கல் வைத்து மிதமான தீயில் சூடு பண்ணவும்.
சூடு ஏறியதும் 1/4 தேக்கரண்டி எண்ணெய் பரப்பி விடவும்.
தோசை மாவை கரண்டியினால் முதலில் கல்லின் ஓரத்தில் ஒரு வட்டமாக  ஊற்ற ஆரம்பித்து மத்தியில் வந்து சேருமாறு முடிக்க வேணடும் .
அதாவது ஒரு பெரிய வட்டம் போட்டு அதை நிரப்ப வேண்டும்.
இதுவே இந்த  தோசை ஊற்றும் முறையாகும்.


தோசை மெல்லியதாக இருக்க வேண்டும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணெய் சொட்டு சொட்டாக தோசை மேல் விட்டு ஓரங்கள் சிவக்கும் வரை காத்திருக்கவும்.
பிறகு தோசை திருப்பியினால் திருப்பி வேக விடவும்.


பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து தட்டில்  அடுக்கவும்.
ஓட்ஸ் தோசை

சட்னி யுடன் அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.


குறிப்பு : 
  • இட்லி அல்லது தோசை மாவுக்கு பதில் 1/4 கப் தயிரும் 1/4 கப் அரிசி மாவும் சேர்த்து மாவு தயாரிக்கலாம்.
  •  தோசை கனமாக வந்தால் இன்னும் சிறிது தண்ணீர் விட்டு கலக்கிக் கொள்ளவும்.





மேலும் சில சமையல் முறைகள் முயற்சி செய்து பார்க்க :

தோசை மாவு
தோசை மாவு
தோசை
தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
பொடி தோசை
பொடி தோசை
மசால் தோசை
மசால் தோசை






இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment