Search This Blog

Saturday, January 4, 2014

Dosai Maavu

#தோசைமாவு : நமது பாரம்பரிய தோசையை தவிர மற்ற  தோசைகளை எவ்வாறு தயாரிப்பது எப்படி என பார்த்து விட்டோம். இப்போது சாதா தோசை மற்றும் மசாலா தோசை தயாரிக்க மாவு எப்படி அரைப்பது  என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
1 கப்                                புழுங்கரிசி ( இட்லி அரிசி )
1 கப்                                பச்சரிசி
1/2 கப்                             உளுத்தம் பருப்பு
1 Tsp                                வெந்தயம்
2 Tsp                                உப்பு


அரைக்கும் முறை :
பச்சரிசியையும் புழுங்கரிசியையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் வெந்தயமும் சேர்க்கவும்.
நன்றாக இரண்டு அல்லது மூன்று முறை கழுவி 3  மணி நேரம் ஊற வைக்கவும்.
அரைப்பதற்கு 1/2 மணிநேரம் முன்னதாக உளுந்தை கழுவி ஊறவைக்கவும்.

கிரைண்டரை ( Grinder ) கழுவி ஊறவைத்த அரிசி, வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து போட்டு நன்கு மைய அரைக்கவும்.
கடைசியாக மாவை பாத்திரத்தில் எடுப்பதற்கு முன் 2 Tsp உப்பு சேர்த்து ஒரு 2 சுற்று ஓடியதும் வழித்தெடுககவும். கிரைண்டெரில் ஒட்டிக்கொண்டுள்ள மாவை 1/4 கப் தண்ணீர் விட்டு கழுவி மாவில் சேர்க்கவும்.
கையினால் கலக்கி விட்டு 6 லிருந்து 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.

தோசை ஊற்றுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக 1/4 கப் ரவாவை சேர்த்து மாவுடன் கலக்கி ஊற விடவும். இட்லி மாவை விட சிறிது நீர்க்க இருக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு  பிறகு தோசை ஊற்ற பயன் படுத்தலாம்.






மேலும் சில சமையல் முறைகள் முயற்சி செய்து பார்க்க :

மசால் தோசை
மசால் தோசை
தோசை
தோசை
கம்பு தோசை
கம்பு தோசை
பொடி தோசை
பொடி தோசை
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை


தொட்டுக்க சட்னி வகைகள்


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி

No comments:

Post a Comment