Search This Blog

Friday, January 3, 2014

Buckwheat Sakkarai Pongal

பாப்பரை சர்க்கரை பொங்கல் : பாப்பரையின் சத்துக்கள் பற்றி முன்பே பாப்பரை பொங்கல்   சமையல் குறிப்பில் பார்த்தோம். இங்கு சர்க்கரை பொங்கல் எப்படி செய்யலாம் என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :

1/2 கப்                      பாப்பரை ( Buckwheat )
ஒரு சிட்டிகை        உப்பு
1/3 கப்                      வெல்லம்
1/4 Tsp                      ஏலக்காய் பொடி
சிறிய துண்டு         ஜாதிக்காய்
5                                முந்திரி பருப்பு
6                                உலர்ந்த திராட்சை
2 Tsp                          நெய்

செய்முறை :
பாப்பரையை குக்கரினுள் வைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு முறை நன்றாக கழுவி 1 கப் தண்ணீர் ஊற்றவும்.
குக்கரில் 1 கப் தண்ணீர் ஊற்றி பாப்பரை உள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து மூடவும. வெயிட் வைத்து அதிக தீயில் 3 விசில் வரும் வரையும் பின் குறைந்த தீயில் 5 நிமிடமும் வேக வைத்து அடுப்பை அணைத்து விடவும்.


மற்றொரு அடுப்பில் வெல்லத்தை நசுக்கி போட்டு சிறிது தண்ணீர் விட்டு சூடேற்றவும்.
வெல்லம் கரையும் வரை சூடாக்கினால் போதும்.
குப்பை மற்றும் கல் நீக்க வடிகட்டிக்கொள்ளவும்.


வேகவைத்த பாப்பரையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் எடுத்து கரண்டியினால் இலேசாக  மசித்து வெல்ல கரைசலை சேர்க்கவும்.
அடுப்பில் குறைந்த தீயில் வைத்து கிளறவும்.


வெல்லமும் பாப்பரையும் ஒன்றாக கலந்து கெட்டியானவுடன் நெய், ஏலக்காய், ஜாதிக்காய் பொடியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.


மைக்ரோவேவில் முந்த்ரியை 1 சொட்டு நெய் விட்டு 2 நிமிடம் வைத்து எடுக்கவும். பின் அதில் உலர்ந்த திராட்சை சேர்த்து 30 வினாடிகள் வைத்து எடுக்கவும்.


 பரிமாறும் பாத்திரத்தில் எடுத்துவைத்து வறுத்த முந்திரி கிஸ்மிஸ் கொண்டு அலங்கரிக்கவும்.

மசால் வடை அல்லது மெது வடை அல்லது பகோடாவுடன் சுவைக்கவும்.



No comments:

Post a Comment