Search This Blog

Thursday, January 16, 2014

Broken Corn Kanji

#மக்காசோளரவாகஞ்சி : உடைத்த மக்காசோளத்தை கொண்டு செய்யப்படும் கஞ்சியை பற்றி இங்கு காண்போம். இந்த கஞ்சி அருமையான சுவை கொண்டது.

மக்காசோளரவா கஞ்சி


 தேவையான பொருட்கள் :


1/4 கப்                        உடைத்த மக்காசோளம்
1/4 கப்                        பால்
3 பற்கள்                   பூண்டு
1 கப்                          தண்ணீர்
1/4 Tsp                       உப்பு

மேலே தூவ :
மிளகுத்தூள்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் சூடேற்றவும்.
பாத்திரத்தின் அடியில் சிறு சிறு காற்றுக் குமிழிகள் வர ஆரம்பித்தவுடன் மக்கா சோள  ரவாவையும் மெல்லியதாக அரிந்த பூண்டையும் சேர்க்கவும்.



தீயை குறைவாக வைத்து வேக விடவும்.

நன்கு வேக ஏறக்குறைய  10 நிமிடங்கள்  ஆகும்.


நன்றாக மலர்ந்து வெந்த பிறகு பாலை சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

மக்காசோளரவா கஞ்சி

உப்பு சேர்த்து தீயை அணைத்து விடவும்.

ஒரு கிண்ணத்தில் எடுத்து மேலே மிளகுதூள் தூவி  ஊறுகாயுடன் அல்லது சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்.

மக்காசோளரவா கஞ்சி

வேறு சில கஞ்சி வகைகள்
கம்பு கூழ் குதிரைவாலி வெந்தய கஞ்சி கோதுமைரவா கஞ்சி

No comments:

Post a Comment