Search This Blog

Thursday, January 16, 2014

Avial

#அவியல் :  கல்யாணம், பண்டிகை போன்ற சுப தினங்களில் அவியல் என்ற உணவு வகை மதிய உணவில் கட்டாயம் உண்டு. இதனை செய்வதற்கு பல காய்கறிகள் தேவை. முக்கியமாக வாழைக்காய் தேவை.
அவியலில் உபயோகப்படுத்தப்படும் காய்கள் :  வாழைக்காய், கத்தரிக்காய், உருளை கிழங்கு, கொத்தவரங்காய், காரட், பூசணி, பீன்ஸ், சுரைக்காய், சேனைகிழங்கு.

அவியல்

தேவையான பொருட்கள் :
என்னென்ன காய்கள் வீட்டில் உள்ளதோ அவற்றில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொள்ளவும். எல்லா காய்கறிகளும் சேர்த்து  1 அல்லது 1 1/2 கப் எடுத்துக்கொள்ளவும்.
2 Tbsp                                      தயிர்
1 Tsp                                        உப்பு
1 சிட்டிகை                          மஞ்சத்தூள்

அரைக்க :
2 Tbsp                                     தேங்காய் துருவல்
1 1/2 Tsp                                  சீரகம்
1 சிறிய அளவு                   வெங்காயம், சிறு துண்டுகளாக்கவும்.
2 பற்கள்                               பூண்டு
2 ( அட்ஜஸ்ட் )                   பச்சை மிளகாய்
1/2 Tsp                                     அரிசி மாவு

தாளிக்க :
1 Tsp                                        கடுகு
1 Tsp                                       சீரகம்
2 Tsp                                       உளுத்தம் பருப்பு
1 அ 2                                     சிகப்பு மிளகாய்
10                                            கருவேப்பிலை
2 Tsp                                       தேங்காய் எண்ணெய்

அலங்கரிக்க :
கொத்தமல்லி தழை தேவையான அளவு.

செய்முறை :


கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் மைய அரைத்தெடுக்கவும். தனியே எடுத்து வைக்கவும்.


வாழைக்காய் தவிர மற்ற காய்கறிகளை குக்கரில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் 1 சிட்டிகை மஞ்சத்தூள் சேர்க்கவும்.


ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வேக வைக்கவும்.
உடனே வெயிட்டை அகற்றி ஆவியை வெளியேற்றவும்.
இப்போது வாழைக்காய் துண்டுகளை சேர்த்து குக்கரை மூடி வெயிட்டை பொருத்தவும். அடுப்பை பற்ற வைக்க வேண்டாம். அந்த சூட்டிலேயே வெந்து விடும்.

 5 நிமிடங்களுக்கு பிறகு குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மசாலாவும் காய்கறிகளும் ஒன்றாக சேர்ந்த பின் அடுப்பை குறைத்து விட்டு தயிரை சேர்த்து கலக்கவும்.


3 முதல் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.


வாணலியை அடுப்பின் மீது வைத்து சூடாக்கி எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்த பிறகு சீரகம், கிள்ளிய சிகப்பு மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து வறுக்கவும். பருப்பு சிவந்ததும் கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவியலின் மேலே தாளித்ததை கொட்டவும்.

அவியல்

மதிய உணவின் போது சாம்பார் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
அடை செய்து அவியல் தொட்டுக்கொண்டு சாப்பிட்டாலும் மிக மிக சுவையாக இருக்கும்.

மற்ற மசாலா குழம்பு வகைகலின் சமையல் குறிப்புகள்

கடப்பா குடைமிளகாய் குருமா காலிப்ளவர் தக்காளி குருமா








No comments:

Post a Comment