Search This Blog

Tuesday, December 31, 2013

Elumichai Sadam

#எலுமிச்சை சாதம் : #கலந்தசாதம் வகைகளில் எலுமிச்சை சாதம் மிக ருசியானதும் , செய்வது மிக எளிதும் ஆகும். மதிய உணவுக்கோ அல்லது பயணத்திற்கோ எடுத்து செல்ல உகந்த சாதமாகும். செய்வதெப்படி என பார்க்கலாம்.

எலுமிச்சை சாதம்



தேவையான பொருட்கள் :
1 கப்                                  பச்சரிசி
1                                        எலுமிச்சை பழம்
4 Tsp                                  நல்லெண்ணெய்


தாளிக்க :
1 Tsp                                  கடுகு
1 Tsp                                  உளுத்தம் பருப்பு
2 Tsp                                  கடலை பருப்பு
4 Tsp                                  நிலகடலை
1/4 Tsp                               வெந்தயம் ( விருப்பப்பட்டால் )
10 - 15                                கருவேப்பிலை
2                                         பச்சை மிளகாய்
2 Tsp                                  கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
2 Tsp                                  நல்லெண்ணெய்

தேவையான பொடிகள் :
1/4 Tsp                              மஞ்சத்தூள்
1/2 Tsp                              மிளகாய்த்தூள்
1/2 Tsp                              சீரகத்தூள்
1/4 Tsp                             பெருங்காயதூள்
2 Tsp                                 உப்பு

செய்முறை :
எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி கொட்டைகளை நீக்கவும்.
ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீரில் மூழ்கி இருக்கும் படி வைக்கவும்.


பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை கழுவி நீர் போக துடைத்த பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

அரிசியை களைந்து குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர் விடவும்.
குக்கரை மூடி அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேகவிட்டு பின் தீயை குறைத்து 3 நிமிடங்கள் வேகவிடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி எண்ணெய் விட்டு பரப்பி காற்றாடிக்கு அடியில் ஆற வைக்கவும்.  அழுத்தம் கொடுக்காமல் ஒரு நீண்ட தேக்கரண்டியினால் அவ்வப்போது கிளறி விடவும். சாதப் பருக்கைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கவேண்டும்.

அடுப்பில் வாணலியை சிறிய தீயில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் முதலில் கடுகை வெடிக்கவிட்டு பின் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம் மற்றும் நிலகடலை ஆகியவற்றை வரிசையாக போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும்.
இப்போது கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொடிகளையும் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.


அடுப்பை அணைத்த பின் எலுமிச்சை பழத்தை பிழிந்து சாரை வாணலியில் வறுத்த பொருட்களுடன் சேர்க்கவும்.


இப்போது தயாரித்துள்ள எலுமிச்சை கலவையை சாதத்தின் மேல் ஊற்றி நன்கு கிளறவும்.


சாதத்தை அழுத்தி பிசைந்து கூழாக்கி விடக் கூடாது.
உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சரி பார்க்கவும்.
தேவையானால் சிறிது சேர்த்து கலக்கி விடவும்
சுவையான எலுமிச்சை சாதம் தயார்.

எலுமிச்சை சாதம்

அப்பளம் அல்லது வத்தல் அல்லது உருளை கிழங்கு பொடிமாஸ் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

எலுமிச்சை சாதம்

நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் எடுத்து வைக்க வேண்டும்.


Sunday, December 29, 2013

Buckwheat Pongal - Papparai Pongal

நான் சென்ற மாதம் மளிகை சாமான்கள் வாங்குவதற்காக கடைக்குச்  சென்றிருந்தேன். அப்போது வெள்ளை கொண்டைகடலை போல ஒரு பாக்கட்டை பார்த்தேன். ஆனால் அது   கொண்டைகடலை அல்ல. நிறமும் வடிவமும் சற்றே  மாறுபட்டிருந்தது. அதன் மேல் fafar giri என எழுதி இருந்தது. அங்கு கடையில் வேலை செய்யும் பெண்ணை இதில் என்ன செய்ய முடியும் என கேட்டேன். அதை மாவாக்கி ரொட்டி அல்லது பூரி செய்வார்கள். பெரும்பாலும் விரதம் இருப்பவர்கள் விரதம் இருக்கும் போது  அதை சாப்பிடுவார்கள் என கூறினார்.


வலை தலத்தில் முதலில் Fafar என்று Google செய்தேன்.
அப்போது Fafar என்பது  Kuttu  என அறிந்து கொண்டேன்.
பிறகு kuttu  என டைப் செய்து தேடினேன்.
Kuttu என்பது ஆங்கிலத்தில் Buckwheat என அழைக்கபடுகிறது.
தமிழில் என்னவென்று அழைக்கப் படுகிறது என தேடி கண்டுபிடித்தேன்.
தமிழில் பாப்பரை என அழைக்கபடுகிறது. தமிழில் இதை பற்றி எனக்கு அறிந்துகொள்ள எந்த விளக்கமும் கிடைக்க வில்லை. கிடைக்கும் போது இங்கு எழுதுகிறேன்.

தமிழ் : பாப்பரை ; ஆங்கிலம் : Buckwheat 
Kindly Go through the links given below to learn about Buckwheat.
To know benefits of Buckwheat .
To know more about Buckwheat.

Buckwheat contains a glucoside called rutin, a phytochemical that strengthens capillary walls. One clinical study showed mixed results in the treatment of chronic venous insufficiency. Dried buckwheat leaves manufactured in Europe under the brand name "Fagorutin" for use as a tisane.

It also contains galloylated propelargonidins and procyanidins.

Buckwheat contains D-chiro-inosital, a component of the secondary messenger pathway for insulin signal transduction found to be deficient in Type II diabetes and polycystic ovary syndrome. It is being studied for use in treating Type II diabetes.

Research on D-chiro-insitol and PCOS has shown promising results.

High protein buckwheat flour is being studied for possible use as a functional ingredient in foods to reduce plasma cholestrol, body fat, and cholestrol gallstones.

Source : Buckwheat

இன்று அதிலிருந்து ஏதாவது செய்து பார்க்கலாம் என காலையில் எடுத்தேன். முதலில் வேக வைத்து பார்ப்போம் என செயலில் இறங்கினேன்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப்  buckwheat - பாப்பரை எடுத்து இரண்டு முறை நன்றாக கழுவி அதனுடன் 1 1/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக வைத்தபின் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வரை வேக வைத்தேன்.
ஆவி அடங்கியபின் எடுத்து பார்த்தேன் நன்றாக வெந்திருந்தது. ஆனால் கொழ கொழ என்றிருந்தது. அதனால் பொங்கல் செய்யலாம் என முடிவெடுத்தேன்.
வெந்த பாப்பரையுடன் வெந்த பயத்தம் பருப்பு மற்றும் மிளகு சேர்த்து கிளறினேன். நன்றாக இருந்தது.
உடனே மறுபடியும் முறைப்படி பொங்கல் செய்தேன். எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
1/3 கப்                                 பயத்தம் பருப்பு
1/2 கப்                                 பாப்பரை - Buckwheat ( kuttu  ஹிந்தியில் )
1 1/2 Tsp                              சீரகம்
1 Tsp                                   மிளகு
3                                         பூண்டு பற்கள்
சிறிய துண்டு                  இஞ்சி ( விருப்பமானால் )
1/2 Tsp                               உப்பு
8                                        கருவேப்பிலை
1/4 Tsp                               மஞ்சத்தூள்

தாளிக்க :
1 Tsp                                சீரகம்
1/2 Tsp                             மிளகு
5                                     முந்திரி பருப்பு
2 Tsp                               நெய்

செய்முறை :
பாப்பரையையும் பருப்பையும் கழுவி குக்கரில் எடுத்துக்கொள்ளவும்.
2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து ஒரு கரண்டியினால் கலக்கவும்.
குக்கரை மூடி வெயிட்டை பொருத்தவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரை வேக விடவும்.
மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து கரண்டியினால் கிண்டவும்.


எண்ணெய்  சட்டியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி முதலில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீரகம், மிளகு  மற்றும் கருவப்பிலை வறுத்து எடுக்கவும்.


வறுத்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கிண்டவும்.
சூடான சுவையான பொங்கல் தயார்.
பரிமாறும் தட்டில் இட்டு அதன் மேல் நெய் விட்டு துவையலுடன் பரிமாறவும்.






Murungaikai Turnip Sambar

முருங்கைக்காய் டர்னிப் சாம்பார் : டர்னிப் வடிவத்தில் பீட்ரூட் போலவும் ருசியில் முள்ளங்கியை போன்றதும் ஆன மண்ணுக்கடியில் வளரும் வேர் ஆகும். இன்று டர்னிப் கூட முருங்கைக்காய் அவரைக்காய் சேர்த்து சாம்பார் செய்தேன். முள்ளங்கியை உபயோகித்து செய்தால் எவ்வளவு ருசியாக இருக்குமோ அதே போல சுவை மிக்கதாக இருந்தது. எவ்வாறு செய்வது என பார்ப்போம்.
டர்னிப்
டர்னிப் 

தேவையான பொருட்கள் :
வேகவைத்த துவரம் பருப்பு                  : 3 Tbsp
டர்னிப்                                                        : 1
முருங்கைக்காய்                                     : 1 அ 2
அவரைக்காய்                                           : 6 ( விருப்பப்பட்டால் )
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
புளியை இளஞ்சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.

சின்ன வெங்காயத்தின் தோலை உறித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.


முருங்கைக்காயை கழுவி ஒரே அளவு நீள துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
டர்னிப்பின்  தோலை நீக்கி ஒரே அளவு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.


குக்கரில் பருப்பை போட்டு நன்கு மசித்து 3/4  Cup நீர் சேர்க்கவும்.
அதில் டர்னிப்பை சேர்த்து  1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
இறக்கியவுடன் ஆவியை உடனே வெளியேற்றவும்.
மறுபடியும் அடுப்பில் ஏற்றி சாம்பார் பொடி , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.


வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.
முருங்கைக்காய் மற்றும் அறிந்து வைத்துள்ள அவரைக்காயை  சேர்க்கவும்.
1 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டி கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.


சுவையான சாம்பார் தயார்.

சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... அதுவல்லவோ பேரானந்தம்!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

மற்ற சாம்பார் வகைகள் :

உருளைகிழங்கு சாம்பார் 
வெங்காய சாம்பார் 


Saturday, December 28, 2013

Broken Maize Pidi Kozhukattai

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை : உடைத்த மக்காசோளம் கொண்டு நான் பொதுவாக கஞ்சி செய்வதுதான் வழக்கம். ஒரே மாதிரி கஞ்சி செய்வதற்கு பதிலாக வேறு ஏதாவது முயற்சி செய்யலாமே என்று யோசித்த போதுதான் இந்த கொழுக்கட்டை செய்யும் திடீர் யோசனை தோன்றியது. உடனே செயலில் இறங்கி விட்டேன். எப்படி என பார்க்கலாம்.

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :


1/4 கப்                                  உடைத்த மக்காசோளம்
1/4 கப்                                  அரைத்த அரிசி மாவு ( இட்லி மாவு அரைக்கும் போது எடுத்தது வைத்தது )
1/4 கப்                                   அரிசி மாவு
1/4 கப்                                   தேங்காய் துருவல்
1                                            சிவப்பு மிளகாய்
2 Tsp                                      உளுத்தம் பருப்பு
3 Tsp                                      கடலை பருப்பு
4 Tsp                                      நில கடலை
5                                             முந்திரி பருப்பு
10                                           கருவேப்பிலை 
1/4 Tsp                                   பெருங்காய பொடி
1/2 Tsp                                   உப்பு
1/2 Tsp                                  கடுகு
1/2 Tsp                                  சீரகம்
2 Tsp                                     எண்ணெய்

செய்முறை :
ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் மாவு, தேங்காய் துருவல், உப்பு மற்றும் உடைத்த மக்காசோளம் எடுத்துக்கொள்ளவும்.


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் கடுகை வெடிக்க விட்டு பின் சீரகம் சேர்க்கவும்.
மிளகாயை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும்.
இதற்கு பிறகு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, அடுத்து முந்திரி மற்றும் நில கடலை ஆகியவற்றை  ஒன்றிரெண்டாக உடைத்து சேர்க்கவும்.
எல்லா பருப்பும் சிவந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் மாவில் சேர்க்கவும்.

இலேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.


அடுப்பில் இட்லி பானையை வைத்து 3 கப் தண்ணீர் விட்டு சூடாக்கவும்.
கையில் சிறிது மாவு எடுத்து அழுத்தி மூடவும்.
ஒரு பிடி கொழுக்கட்டை செய்தாகி விட்டது.


அதே போல கொழுக்கட்டை பிடித்து எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி வைக்கவும்.
இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கொழுக்கட்டை அடுக்கியுள்ள இட்லி தட்டை வைத்து மூடியினால் மூடவும்.


பத்து நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
பாத்து நிமிடங்களுக்கு பிறகு ஒரு கொழுகட்டையை எடுத்து வெந்து விட்டதா என பார்க்கவும்.
வேக வில்லை என்றால் மறுபடியும் 3 நிமிடங்கள் வேக வைக்கவும்.

எடுத்து தக்காளி  சாஸுடன் பரிமாறவும்.

உடைத்த மக்காசோளம்  பிடி கொழுக்கட்டை





Ragi Adai

#கேழ்வரகுஅடை : #கேழ்வரகு என்பதை பேச்சு வழக்கில் #கேவுரு என்றும் #கேப்பை என்றும் அழைப்படுகிறது. ஆங்கிலத்தில் பொதுவாக #Ragi என அழைக்கப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் #FingerMillet  என்று பெயர்.
என் அம்மா அடிக்கடி இந்த #அடை செய்வது உண்டு. கேழ்வரகு மாவை கொண்டு கார அடையும் இனிப்பு அடையும் செய்யலாம். கார அடை செய்த அன்றே சாப்பிட்டு விடுவது நல்லது. வெங்காயம் சேர்த்து செய்வதால் கெட்டு போய் விடும் அபாயம் உண்டு. ஆனால் இனிப்பு அடையை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்து சாப்பிடலாம்.
நான் இந்த கார கேவுரு அடையை டிபனாக செய்து மிகுந்த நாட்களாகி விட்டது. உண்மையாக சொன்னால் மறந்தே போய் விட்டேன். சென்ற வாரம் என் மகள் தான் கேவுரு அடை செய்ததாக சொன்னாள். அவள் சொன்னபிறகுதான் நாமும் செய்யலாமே என்று இரு தினங்களுக்கு முன் செய்தேன்.

கேழ்வரகு அடை [ ராகி அடை ]

இனி கேவுரு கார அடையை செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :
1 கப்                              கேழ்வரகு மாவு
1 Tbsp                            ஓட்ஸ் [ விரும்பினால் ]
1 Tsp                              எண்ணெய்
1/2 Tsp                           எள்ளு
1/2 Tsp                           சீரகம்
1/4 Tsp                           ஓமம் ( விருப்பப்பட்டால் )
1/4 Tsp                           பெருங்காய பொடி ( விருப்பப்பட்டால் )
1                                     பெரிய வெங்காயம் ( பொடியாக நறுக்கவும்  )
2 அ  3                            பச்சை மிளகாய் ( பொடியாக நறுக்கவும் )


1 Tbsp                            காரட் துருவியது
1/2 Tsp                           உப்பு ( அட்ஜஸ்ட் )
15                                   கருவேப்பிலை (  பொடியாக நறுக்கவும்  )
4Tsp                               கொத்தமல்லி தழை  பொடியாக நறுக்கியது

தேவையான அளவு எண்ணெய் அடை சுடுவதற்கு.

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
கையினால் ஒன்றாக சேர்த்து பிசறி விடவும்.


பிறகு மிக மிக மிதமான சுடு தண்ணீரை ஊற்றி மாவை பிசைந்து கொள்ளவும்.
சிறிது கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும்.
மாவு தயார்.


இனி தோசை கல்லில் அடை எப்படி சுடுவது என பார்ப்போம்.
ஒரு சுத்தமான  வாழை இல்லை அல்லது பிளாஸ்டிக் தாள் எடுத்துக்கொள்ளவும். நான் தாள் எடுத்துக் கொண்டேன்.
அடுப்பில் தோசை கல்லை சூடாக்கவும்.
தாளின் மேல் எண்ணெய் தடவவும்.
ஒரு உருண்டை மாவை தாளின் மேல் வைக்கவும்.
கை விரல்களிலும் எண்ணெய் தடவிக் கொண்டு அடை தட்டவும்.


ஒரே மாதிரி தடிமனாக தட்ட வேண்டும்.
சூடான கல்லில் எண்ணெய் விட்டு தட்டி வைத்த அடையை கவனமாக எடுத்து போடவும்.
அடையின் மேல் 1/2 Tsp எண்ணெய் பரவலாக ஊற்றவும்.

கேழ்வரகு அடை [ ராகி அடை ]

திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
இதே போல ஒவ்வொன்றாக தட்டி சுட்டு எடுத்து அடுக்கவும்.

இதில் காரம் சேர்த்திருப்பதால் ஏதும் தொட்டுக் கொள்ள தேவையே இல்லை.


தேவையானால் தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.






முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் :

கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு [ ராகி ] குழிபணியாரம்
கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]
கேழ்வரகு தோசை [ ராகி தோசை ]
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]
கேழ்வரகு புட்டு [ ராகி புட்டு ]





Thursday, December 26, 2013

Murungaikai Mullangi Sambar

முருங்கைக்காய் முள்ளங்கி சாம்பார் : சாம்பார் என்றவுடன் முதலில் ஞாபகத்திற்கு வருவது முருங்கைகாய்தான். ஆம்! சாம்பார் செய்ய மிகவும் உகந்த காய் முருங்கைக்காய் ஆகும். முருங்கைக்காய் மற்றும் முள்ளங்கி இரண்டையும் சேர்த்து சாம்பார் செய்யும் போது சாம்பார் கூடுதல் சுவையுடன் அருமையாக இருக்கும். பனி காலமானதால் முருங்கைக்காய் கிடைப்பது அரிது. ஆனால் நேற்று காய்கறி மார்கட் சென்ற போது அதிசயமாக முருங்கைக்காய் கிடைத்தது. பணியினால் நிறம் சற்று  கருப்பாக இருந்தது என்றாலும் கிடைக்கும் பொது தவற விடுவானேன் என்று வாங்கி விட்டேன். இப்போது எவ்வாறு சாம்பார் செய்வது என பார்ப்போம்.

முருங்கைக்காய் முள்ளங்கி சாம்பார்

தேவையான பொருட்கள் :
வேகவைத்த துவரம் பருப்பு                  : 1/3 cup
முள்ளங்கி                                                : 1
முருங்கைக்காய்                                     : 1 அ 2
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
முருங்கை கீரை                                      : சிறிதளவு ( இருந்தால் )
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு




செய்முறை :

சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கீரை, கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.
முருங்கைக்காயை கழுவி ஒரே அளவு நீள துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
முள்ளங்கியின் தோலை நீக்கி ஒரே அளவு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.
குக்கரில் பருப்பை போட்டு நன்கு மசித்து 3/4  Cup நீர் சேர்க்கவும்.
அதில் முள்ளங்கியை 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
இறக்கியவுடன் ஆவியை உடனே வெளியேற்றவும்.
மறுபடியும் அடுப்பில் ஏற்றி சாம்பார் பொடி , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.
வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.


முருங்கைக்காயை சேர்க்கவும்.
1 கப் தண்ணீரில் புளியை கரைத்து வடி கட்டி கொதிக்கும் சாம்பாரில் சேர்க்கவும்.


குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... அதுவல்லவோ பேரானந்தம்!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.


Madras Rasam

மதராஸ் ரசம் : ரசம் செய்வதற்கு பருப்பு தண்ணீர் தேவை. சில சமயங்களில் பருப்பு மற்ற சமையலுக்கு தேவை இருக்காது. ரசத்திற்காக மட்டும் பருப்பு வேக வைத்தால் மீந்து போய் விடும். அந்த சமயங்களில்  மதராஸ் ரசப் பொடி உபயோகித்து ரசம் செய்யலாம். ரசத்திற்கு புளிப்பு சுவைக்காக புளி  அல்லது எலுமிச்சை சாறு பயன் படுத்தலாம். இங்கு எலுமிச்சை சாறு பயன் படுத்தி மதராஸ் ரசம் எவ்வாறு செய்யலாம் என பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :
1                                                தக்காளி
1 அ 2                                        பச்சை மிளகாய்
1 சிட்டிகை                              மஞ்சத்தூள்
2 Tsp                                         மதராஸ் ரசப் பொடி
1 1/2 Tsp                                   உப்பு
2                                               பூண்டு
1  துண்டு                                இஞ்சி ( விருப்பப் பட்டால் )
6                                               கருவேப்பிலை
1                                               எலுமிச்சை  பழம்

தாளிக்க :
1 Tsp                                      கடுகு
1 Tsp                                      சீரகம்
8                                             கருவேப்பிலை
1 Tsp                                       எண்ணெய்

அலங்கரிக்க :

கொத்தமல்லி தழை சிறிது.

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தக்காளியை 8 துண்டுகளாக்கி போடவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் கீறி சேர்க்கவும்.
பூண்டையும் இஞ்சியையும் நசுக்கி சேர்க்கவும்.


மஞ்சத்தூள், ரசப் பொடி மற்றும் உப்பு சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கொதிக்கும் ரசம் மேலே நுரை பொங்கி வரும் போது கருவேப்பிலையை கிள்ளி  போட்டு அடுப்பை அணைத்து விடவும். 
இப்போது  எலுமிச்சை  பழச் சாறை சேர்க்கவும்.



வாணலியை சூடாக்கி எண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பின் சீரகத்தையும் கருவேப்பிலையும் வெடிக்க விட்டு ரசத்தின் மேல் ஊற்றவும்.


பரிமாறும் முன்  கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.



சூடான சாதத்தில் முதலில் தக்காளி போட்டு அழுத்தி பிசைந்து பிறகு தாராளமாக ரசம் விட்டு கலக்கி பிடித்தமான துவட்டல் அல்லது கார கறியுடன் சுவைக்கவும்.




மற்றொரு ரசம் செய்முறை :

கோக்கம் ரசம் 

Orange Rasam

ஆரஞ்சு ரசம் : தினமும் எலுமிச்சை பழச் சாற்றை கொண்டுதான் ரசம் செய்வது வழக்கம். ஆனால் எலுமிச்சை பழம் தீர்ந்து விட்டது.  என்ன செய்யலாம் என யோசித்த போது ஆரஞ்சு கண்ணில் தென்பட்டது. மேலும் அந்த ஆரஞ்சை   முந்தின தினம் சுவைத்த பொது மிகவும் புளிப்பாக இருந்தது. சரி இதை கொண்டு இன்று ரசம் முயற்சி செய்து பார்க்கலாம் என இறங்கினேன். அருமையாக இருந்தது. அதனால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை.


தேவையான பொருட்கள் :
1                                                தக்காளி
1 அ 2                                        பச்சை மிளகாய்
1 சிட்டிகை                              மஞ்சத்தூள்
2 Tsp                                         மதராஸ் ரசப் பொடி
1 1/2 Tsp                                   உப்பு
2                                               பூண்டு
1  துண்டு                                இஞ்சி ( விருப்பப் பட்டால் )
6                                               கருவேப்பிலை
1                                              ஆரஞ்சு பழம்

தாளிக்க :
1 Tsp                                      கடுகு
1 Tsp                                      சீரகம்
8                                             கருவேப்பிலை
1 Tsp                                       எண்ணெய்

அலங்கரிக்க :
ஆரஞ்சு மேல் தோல் துருவியது.
கொத்தமல்லி தழை சிறிது.

செய்முறை :
ஆரஞ்சு மேல்தோலை காரட் துருவியில் இலேசாக சீவிக் கொள்ளவும்.
பிறகு பழச் சாறு பிழிந்து தனியாக எடுத்து வைக்கவும்.


 ஒரு பாத்திரத்தில் தக்காளியை 8 துண்டுகளாக்கி போடவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் கீறி சேர்க்கவும்.
பூண்டையும் இஞ்சியையும் நசுக்கி சேர்க்கவும்.
மஞ்சத்தூள், ரசப் பொடி மற்றும் உப்பு சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் கொதிக்க விடவும்.


கொதிக்கும் ரசம் மேலே நுரை பொங்கி வரும் போது ஆரஞ்சு பழச் சாறை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்.


கருவேப்பிலையை கிள்ளி  போட்டு அடுப்பை அணைத்து விடவும்.
வாணலியை சூடாக்கி எண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பின் சீரகத்தையும் கருவேப்பிலையும் வெடிக்க விட்டு ரசத்தின் மேல் ஊற்றவும்.
பரிமாறும் முன் துருவிய ஆரஞ்சு தோல் மற்றும் கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்.


சூடான சாதத்தில் முதலில் தக்காளி போட்டு அழுத்தி பிசைந்து பிறகு தாராளமாக ரசம் விட்டு கலக்கி பிடித்தமான துவட்டல் அல்லது கார கறியுடன் சுவைக்கவும்.