Search This Blog

Monday, December 9, 2013

Vathakuzhambu

#வத்தக்குழம்பு : தண்ணீர் அதிகமில்லாமல் புளி கொண்டு  கொழ கொழவென்று சிறிது கெட்டியாக செய்யப்படும் உணவு வகையை #குழம்பு என்று சொல்லப்படுகிறது. இந்த குழம்பை வற்றல் கொண்டோ அல்லது காய்கறிகள் கொண்டோ செய்யலாம். பொதுவாக சில காய்கறிகளை கொண்டு செய்யப்படும் போதுதான் சுவையுடன் இருக்கும். கத்தரிக்காய், முருங்கைக்காய், சேனை கிழங்கு மற்றும் அவரைக்காய்  ஆகியவை வத்தக் குழம்பிற்கு ஏற்ற காய்கறிகளாகும். காய்கறிகள் இல்லாமல் கொண்டைக்கடலை, காராமணி, நிலக்கடலை ஆகியவற்றுடனும் செய்யலாம். இப்போது #வத்தக்குழம்பு செய்முறையை பார்ப்போம்.

வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள் :

சின்ன நெல்லிக்காய் அளவு                         புளி
7                                                                                சின்ன வெங்காயம்
20 பற்கள்                                                               பூண்டு
1                                                                                கத்தரிக்காய் சிறியது
1                                                                                தக்காளி
1 Tsp                                                                         கடுகு
2 Tsp                                                                         மணத்தக்காளி வற்றல்


2 Tsp                                                                         நிலக்கடலை
1 Tsp                                                                         கடலை பருப்பு
1/4 Tsp                                                                      வெந்தயம்
10 இலைகள்                                                        கருவேப்பிலை

1/4 Tsp                                                                     பெருங்காய தூள்
1 Tsp                                                                        மல்லி தூள்
1/2 Tsp                                                                     சீரகத்தூள்
3 Tsp குவித்து                                                     சாம்பார் தூள்
1/4 Tsp                                                                     மஞ்சத்தூள்
2 Tsp                                                                        உப்பு
3 Tsp                                                                        நல்லெண்ணெய்
1 Tsp ( விருப்பப்பட்டால் )                              வெல்லம்

செய்முறை :
புளியை சிறிது  சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்.


வெங்காயத்தையும் பூண்டையும் உறித்து சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.


கத்தரிக்காய் மற்றும் தக்காளியை கழுவி சிறிய துண்டுகளாக்கவும்.
கத்தரிக்காய் துண்டுகளை தண்ணீரில் போட்டு வைக்கவும்.
அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து 2 Tsp எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும் .
அதன் பின் வற்றல் போட்டு வறுக்கவும்.
வற்றல் நன்றாக பொறிந்ததும்  கடலை பருப்பு, நிலக்கடலை போட்டு வறுக்கவும்.
பொன்னிறமானதும் வெந்தயம் மற்றும் பெருங்காயம் சேர்த்து சிறிது வறுத்தபின் குக்கரில் எடுத்து போடவும்.


மீண்டும் அதே  எண்ணெய் சட்டியில் 1 Tsp எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு போட்டு மணம் வரும் வரை வதக்கவும்.
பிறகு தக்காளியை 1 நிமிடம் வதக்கவும்.

இப்போது கத்தரிக்காய் துண்டுகளை வதக்கவும்.
கொடுக்கப்பட்டுள்ள தூள்களை சேர்த்து சில வினாடிகள் பிரட்டி விட்டு குக்கரில் எடுத்து போடவும்.
புளியை 1 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் விடவும்.
மேலும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
உப்பை சேர்த்து கொதிக்கவிடவும். விரும்பினால் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

வத்தக்குழம்பு

குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை அதிக தீயில்  வேகவிடவும்.
ஆவி அடங்கியவுடன் திறந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.

வத்தக்குழம்பு




சுவையான வத்தக் குழம்பு தயார்.
சூடான சாதத்தில் பருப்பும் நெய்யும் சேர்த்து பிசைந்து வத்தக் குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் சுவையே அலாதிதான்.

அதே போல கீரை மசியலும் நல்லெண்ணையும் சேர்த்து பிசைந்த சாதத்திற்கும் வத்தக் குழம்பு தொட்டுகொள்ள நன்றாக இருக்கும்.

சாதத்தில் தேவையான அளவு வத்தக் குழம்பு ஊற்றி நல்லெண்ணெயுடன் பிசைந்து பிரியமான துவட்டல் / பொரியல் லுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

சேனை கிழங்கு வத்தக்குழம்பு
சேனை கிழங்கு வத்தக்குழம்பு
சுண்டைக்காய் வத்தக்குழம்பு
சுண்டைக்காய் வத்தக்குழம்பு
புளிக்கூழ்
புளிக்கூழ்
மணத்தக்காளி வத்தக்குழம்பு
மணத்தக்காளி வத்தக்குழம்பு
பஜ்ஜி
பஜ்ஜி


No comments:

Post a Comment