Search This Blog

Friday, December 20, 2013

Varagarisi Pongal

#வரகுஅரிசிபொங்கல் : #சிறுதானியம் வகைகளில் ஒன்றான #வரகரிசி கொண்டு அரிசியில் என்னென்ன செய்யலாமோ அதேபோல உணவு தயாரிக்கலாம். முன்பு சாமை அரிசி கொண்டு பொங்கல் செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. அதனால் வரகு கொண்டு செய்து பார்த்தபோது அருமையாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

 வரகரிசியை ஆங்கிலத்தில் கோடோ மில்லெட் என அழைக்கப்படுகிறது. வரகு அரிசியின் அறிவியல் பெயர் Paspalum Scrobiculatum.
மேலும் சிறு தானிய வகைகளை பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Millet

வரகு பற்றி அறிய
http://en.wikipedia.org/wiki/Kodo_millet

தமிழில் வரகு 

வரகுஅரிசி பொங்கல்

தேவையான பொருட்கள் :

வரகுஅரிசி
தமிழ் : வரகரிசி ; English : Kodo Millet 

வரகு  அரிசி                                   : 3/4 கப்
பயத்தம் பருப்பு                             : 1/4 Cup
பச்சை மிளகாய்                           : 1 அ 2 ( விருப்பப்பட்டால் )
சீரகம்                                              : 1 1/2 Tsp
மிளகு                                              : 1 Tsp
மிளகுத்தூள்                                   : 1 Tsp
கருவேப்பிலை                               : 10 - 15
பூண்டு பல்                                       : 3
இஞ்சி பொடியாக அறிந்தது     : 1 Tsp
மஞ்சத்தூள்                                     : 3 சிட்டிகை
உப்பு                                                  : 1 Tsp ( அட்ஜஸ்ட் )

தாளிக்க :
சீரகம்                                                          : 1 Tsp
மிளகு                                                         : 1 Tsp
கருவேப்பிலை                                         : 8
முந்திரி பருப்பு                                         : 5
நெய்                                                           : 2 Tsp

செய்முறை :
கழுவி அரித்து வைத்துள்ள வரகு அரிசியுடன்  பருப்பையும் நன்றாக கழுவி குக்கரில் எடுத்துக் கொள்ளவும்.
மற்ற பொருட்களையும் சேர்க்கவும்.
3 1/2 கப் தண்ணீர்ஊற்றவும்.

ஒரு கரண்டியினால் கலக்கி விடவும்.
குக்கரை மூடி வெயிட்டை பொருத்தவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரை வேக விடவும்.
மேலும் 5 நிமிடங்கள் சிறிய தீயில் வேக வைத்து இறக்கவும்.
ஆவி அடங்கியவுடன் மூடியை திறந்து கரண்டியினால் கிண்டவும்.
எண்ணெய்  சட்டியை அடுப்பில் மிதமான தீயில் வைத்து நெய் ஊற்றி முதலில் முந்திரி துண்டுகளை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு சீரகம், மிளகு, பச்சை மிளகாய் துண்டுகள் மற்றும் கருவப்பிலை வறுத்து எடுக்கவும்.
வறுத்த பொருட்களை பொங்கலுடன் சேர்த்து கிண்டவும்.
சூடான சுவையான பொங்கல் தயார்.
பரிமாறும் தட்டில் இட்டு அதன் மேல் நெய் விட்டு துவையலுடன் பரிமாறவும்.
அடுப்பிலிருந்து இறக்கியவுடன் சூடாக நெய் ஒன்றிரண்டு தேக்கரண்டி சேர்த்து சாப்பிட்டால் சுவையே அலாதிதான்.

வரகு அரிசி பொங்கல்



மேலும் முயற்சி செய்து பார்க்க சில சமையல் குறிப்புகள்
வரகரிசி உப்புமா வரகரிசி சுண்டல் வரகரிசி கொத்தமல்லி பொங்கல்





No comments:

Post a Comment