Search This Blog

Friday, December 20, 2013

Idly Milagai Podi

#இட்லிமிளகாய்பொடி : இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னியும் சாம்பாரும் இருந்தாலும் #மிளகாய்பொடி யுடன் சாப்பிடும் போது கூடுதல் சுவையுடன் இருக்கும். பருப்பை வறுத்து அரைக்கும் பொது கரகரப்பாக அரைக்க வேண்டும். சாப்பிடும் போது பருப்பு பல்லில் கடி பட்டால்தால் நன்றாக இருக்கும். என்னென்ன பொருட்கள் தேவை, எப்படி செய்வது என பார்ப்போம்.

இட்லி மிளகாய்பொடி செய்ய தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                 கடலை பருப்பு
1/2 கப்                                 உளுத்தம் பருப்பு
10                                         சிவப்பு மிளகாய்
1/4 கப்                                 எள்ளு
1 1/2 Tsp                               உப்பு
1 சின்ன கட்டி                  பெருங்காயம்
2 Tsp                                      நல்லெண்ணெய்

செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து 1/2 Tsp எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முதலில் மிளகாயை நன்கு வறுத்துக்கொள்ளவும்.
ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
அதே வாணலியில் 1/2 TSp எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொறித்து எடுக்கவும். தட்டில் எடுத்து வைக்கவும்.
இருக்கும் எண்ணெயிலேயே கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
இப்போது 1/2 Tsp எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பையும் பொன்னிறமாக வறுத்தெடுத்து தட்டில் வைக்கவும்.
கடைசியாக எள்ளை எண்ணெய் இல்லாமல் படபடவென பொறியும் வரை வறுத்து எடுக்கவும்.
உப்பையும் இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறிய பின் மிக்சியில் மிளகாய் உப்பு பெருங்காயத்தை மைய அரைத்துக் கொள்ளவும். பருப்பை  கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
எள்ளை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி விடவும்.
காற்றுப் புகா வண்ணம் பாட்டிலில் சேமித்து வைக்கவும்.

இட்லியுடன் அல்லது தோசையுடன் சாப்பிட தேவையான அளவு பொடியை தட்டில் விட்டு அதன் மேல் நல்லெண்ணெய் விட்டு குழைத்துக் கொள்ளவும்.
இவ்வாறு எண்ணெயுடன் குழைத்ததை இட்லியுடன் தொட்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாக இருக்கும்.

குறிப்பு :

  • நான் வசிக்கும் ராய்ப்பூர் கடைகளில் கிடைக்கும் மிளகாய் நிறம் கம்மியாக இருந்தாலும் காரம் மிக மிக அதிகம். அதனால் மிளகாய் அளவை குறைத்து கொடுத்துள்ளேன். காரத்திற்கு தக்கபடி தேவையான மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
  • எள்ளை பொடிக்கும் போது மூன்று நான்கு சுற்று சுற்றி நிறுத்தி மறுபடியும் மூன்று நான்கு சுற்று சுற்றி அரைக்க வேண்டும். இல்லாவிடில் சூட்டினால் பொடியாகாமல் எண்ணெய் விட ஆரம்பித்துவிடும். மிக்ஸி அரைக்கும் பாத்திரம் சூடானால் சிறிது ஆற விட்டு பின் அரைப்பது நலம்.









மேலும் சில அத்தியாவசியமான பொடி வகைகள் 
சாம்பார் பொடி
சாம்பார் 
பொடி
மிளகுப் பொடி
மிளகுப்
பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
கொத்தமல்லி முருங்கைக்கீரை பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
ஆளி விதை சேர்த்த இட்லி மிளகாய்ப் பொடி
மதராஸ் ரசப் பொடி
மதராஸ்
ரசப் 
பொடி




No comments:

Post a Comment