Tuesday, November 19, 2013

Coconut Chutney

#தேங்காய்சட்னி : தேங்காய் சட்னி எல்லா வைகையான சிற்றுண்டிகளுக்கு ஏற்ற #சட்னி யாகும். இந்த சட்னியை நினைக்கும் போதே கண் முன்னால் வருவது இட்லி, வடை, தோசை, பொங்கல், உப்புமா மற்றும் பல.,... இதன் சுவை தேங்காயின் ருசியையும் அதனுடன் சேர்த்து அரைக்கும் பொட்டுகடலையின் ருசியையும் அளவையும் பொருத்தே அமையும்.

தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல்                           : 1 Cup
பச்சை மிளகாய்                                 : 2 ( அட்ஜஸ்ட் )
பொட்டுகடலை ( Fried Grams )        : 1/4 Cup
பூண்டு பல்                                            : 1
இஞ்சி                                                     : சிறு துண்டு
உப்பு                                                        : 1/2 Tsp ( அட்ஜஸ்ட் )

தாளிக்க :
கடுகு                                                     : 1 Tsp
கருவேப்பிலை                                 : 10 - 12
நல்லெண்ணெய்                              : 1 Tsp

செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும்  மிக்ஸ்யில் முதலில் தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்.
பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் வழித்தெடுக்கவும் .
வாணலியை அடுப்பில் எண்ணெயுடன்  வைத்து சூடு பண்ணவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும்.
பிறகு கருவேப்பிலையை பொறித்து எடுத்து சட்னி மேல் ஊற்றவும்.
இப்போது சட்னி தயார்.
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி தேங்காய் சட்னி
முன்பே சொன்ன மாதிரி எல்லா வகை சிற்றுண்டி வகைகளுடனும் சாப்பிடலாம்.

மற்றொரு சட்னி தேங்காயுடன்

தேங்காய் சட்னி  சிகப்பு 

No comments:

Post a Comment